
2017-18ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் புகையிலை பொருட்கள், சிகரெட்டுகளுக்கான விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது 65 மில்லி மீட்டர் நீளத்துக்கு அதிகம் இல்லாத பில்டர் அல்லாத சிகரெட்டுகளின் கலால்வரி ஆயிரம் சிகரெட்டுகளுக்கு ரூ.215லிருந்து, ரூ.311 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது.
பான்மசாலா, குத்கா போன்ற புகையிலை பொருட்களுக்கான வரி 10 சதவீதத்தில் இருந்து, 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, பான்மசாலா, குத்கா ஆகிய பொருட்களின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து உயரக்கூடும்.
பான்மசாலாவுக்கான உற்பத்தி வரி 6சதவீதத்தில் இருந்து 9சதவீதமாக உயர்வு. கச்சா புகையிலைக்கு வரி 4.2சதவீதத்தில் இருந்து 8.3 சதவீதமாக அதிகரிப்பு
மேலும், சிகர், சீரூட்ஸ் ஆகியவை ஆயிரம் எண்ணிக்கைக்கு ரூ.4006 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் ரூ.3,755 ஆக இருந்தது.