வரலாற்றில் முதல்முறையாக ரயில்வே, பொது பட்ஜெட் இணைந்து தாக்கல் - 2 மணிநேர உரையை நிறைவு செய்தார் ஜேட்லி

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 01:42 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
வரலாற்றில் முதல்முறையாக ரயில்வே, பொது பட்ஜெட் இணைந்து தாக்கல் - 2 மணிநேர உரையை நிறைவு செய்தார் ஜேட்லி

சுருக்கம்

நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதிலும் இந்திய வரலாற்றில் ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட்டுன் இணைந்து முதன்முறையாக தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக நேற்று ஜனாதிபதி உரையுடன், கூட்டம் தொடங்கியது. அப்போது, எமபி இ.அகமது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் இ.அகமது இறந்தார்.

இதையடுத்து இனறு பட்ஜெட் தாக்கல் நடக்குமா என்பது கேள்விக்குறியாக இருந்தது. இ.அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் ஒத்தி வைக்கப்படும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பேசிய பாஜக எம்பிக்கள் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என கூறினர். பின்னர், பட்ஜெட் தாக்கல் தொடங்கியது.

இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டம் தொடங்கியபோது, எம்பி மல்லிகார்ஜுன கார்கே, இந்திய முஸ்லீம் லீக் கட்சியின் ஒரு மூத்த தலைவர் மற்றும் எம்பி இறந்துவிட்டார். அவருக்கு இரங்கல் தெரிவிக்காமல், பட்ஜெட் கூட்டம் நடத்துவத்தற்கு கண்டனம் தெரிவித்தார். இதைதொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டனர்.

பின்னர், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, பட்ஜெட் தாக்கலுக்கான அறிக்கையை வாசித்தார். அதில், 2017 – 18ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.

விவசாயம், வீடு இல்லாதோருக்கு வீடு, சாலை, ஊரக வேலை வாய்ப்பு, மின்சாரம், ரயில்வே என பல்வேறு துறைகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு குறித்து பேசினார். இதில் மத்திய அரசின் அதிரடி அறிவிப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்திய வரலாற்றில் ரயில்வே பட்ஜெட் முதன்முறையாக பொது பட்ஜெட்டுடன் இணைந்து தாக்கல் செய்யப்பட்டது.

சுமார் 2 மணிநேரம் பட்ஜெட் அறிக்கையை வாசித்த அமைச்சர் அருண் ஜேட்லி, சில நிமிடங்களுக்கு இடையில் தண்ணீர் குடித்தவாறு, வாசித்து கொண்டே இருந்தார். சுமார் 11.15 மணியளவில், கால் வலியின் காரணமாக அவரது இருக்கையில் உட்கார்ந்து, அறிக்கையை வாசித்த அவர், திடீரென மீண்டும் எழுந்து நின்று அறிக்கை வாசித்து முடித்தார்.

சுமார் 2 மணி நேரம் விடாமல், பட்ஜெட் அறிக்கையை நிறுத்தாமல் அமைச்சர் அருண் ஜேட்லி வாசித்ததை பார்த்த சக பாஜக எம்பிக்கள், மேஜைகளையும், கைகளையும் தட்டி கரகோஷம் எழுப்பினர். ஆனால், காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!