
இரண்டு மணி நேர பட்ஜெட்டை அருண் ஜெட்லி தாக்கல் செய்து முடித்த உடனே வெளியேறி விட்டார் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி.
அதுமட்டுமின்றி ஜெட்லியின் இந்த பட்ஜெட்டை கடுமையாக சாடியுள்ளார்.
இது ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட் என்றும் மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த அம்சங்கள் இல்லை என்றும் குறை கூறியுள்ளார்.
ஏமாற்றம் அளிக்ககூடிய இந்த பட்ஜெட்டில் மக்களின் வளர்ச்சிக்கு தேவையான எந்த அமசங்களும் இல்லை.
ரயில்வே பட்ஜெட் என்றால் என்ன? அதில் மக்களுக்கு செய்து கொடுக்க கூடிய பாதுகாப்பு, வசதிகள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எனவே இது ஏழை மக்களுக்கு எதிரான பட்ஜெட் என்றும் தெரிவித்தார்.
ஆனால் அரசியல் கட்சிகள் நன்கொடை குறித்த அருண் ஜேட்லியின் அறிவிப்பை ராகுல் காந்தி வரவேற்று பேசியது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.