பணமதிப்பிழப்பு பற்றி விளக்கம் அளிக்காத ஜேட்லி - கருப்பு பணம் ஒழிப்பு பற்றி மழுப்பல்

First Published Feb 1, 2017, 3:58 PM IST
Highlights


பட்ஜெட்டுக்கு முன்னர் கடந்த நவம்பர் மாதம் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கம் காரணமாக நாடுமுழுதும்  கடுமையான  பாதிப்பை ஏற்படுத்தியது. பணமதிப்பு நீக்கம் காரணமாக  நாட்டின் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டது.

உற்பத்தி முடங்கியது. கருப்பு பணத்தை ஒழிப்பதாக கொண்டுவரப்பட்ட  பணமதிப்பு நீக்க நடவடிக்கையில் கருப்பு பணம் முழுதும் வங்கிக்குள் வந்துவிட்டது. இதனால் மத்திய அரசு எதிர்பார்த்த கருப்பு பணம் சிக்கவில்லை.

 இது குறித்து பட்ஜெட்டில் எந்த வித குறிப்பும் இல்லை. கருப்பு பணத்தை ஒழிப்போம் என பொத்தாம் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கருப்பு பண ஒழிப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றதா . பணமதிப்பிழப்பு விவகாரத்தில் கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதா? எவ்வளவு சிக்கியது? போன்றவை பற்றிய அறிவிப்பே இல்லை.

பணமதிப்பிழப்பு குறித்த தாக்கத்தை அடுத்த ஆண்டு பாருங்கள் என்று கூறிவிட்டு அடுத்த விஷயத்துக்கு தாவி விட்டார். பணமதிப்பிழப்பை தொடர்ந்து மேலும் சில அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே.

மறுபுறம் கருப்பு பணத்தை ஒழிப்போம் என பொத்தாம் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அதை ஒழிப்பதற்கான எந்தவித அறிவிப்பும் இல்லை. 

click me!