"ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க... Service Tax கிடையாது" - அருண் ஜெட்லி குஷி

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 01:08 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
"ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் பண்ணுங்க... Service Tax கிடையாது" - அருண் ஜெட்லி குஷி

சுருக்கம்

2017 – 2018 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றினார். கடந்த ஆண்டு வரை ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட் ஆகியலை தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டன.

பிரிட்டன் கால நடைமுறையான இதை மாற்றி இந்த ஆண்டு முதல் இரு பட்ஜெட்களையும் ஒன்றாகவே அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்தார்.

அதில் ரயில்வே துறை திட்டங்களுக்கு ரு1.31 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகல ரயில் பாதை தடத்தில்2020 ஆம் ஆண்டுக்குள் ஆளில்லா ரயில்வே கேட் இல்லாத நிலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி  செய்து தரப்படும் என ஜெட்லி தெரிவித்தார்.

3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை  அமைக்கப்படும்.

ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கப்படும்.

வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு போன்றவற்றிற்கு செல்ல வசதியாக தனி ரயில்கள் விடப்பபடும் என்றும் தெரிவித்தார்.

9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்  

வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை உருவாக்கப்படும்

2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறை வசதிகள் செய்து தரப்படும்.

500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி செய்து தரப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்தார்.

முத்தாய்ப்பாக ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி விதிக்கப்பட மாட்டாது எனவும் அருண் ஜெட்லி அறிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!