
கடந்த நவம்பர் 8ம் தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கையில் இருப்பு வைத்துள்ள பணத்தை அனைத்து வங்கியிலும் டெபாசிட் செய்யலாம் என கூறியது.
மேலும், வங்கியில் ரூ.4000 மட்டும் எடுக்க முடியும், ஏடிஎம் மையங்களில் ரூ.2000 மட்டும் எடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஏடிஎம் மையங்களில் 4,500 எனவும், பின்ன 10 ஆயிரம் வரையும் எடுக்க வரையறுக்கப்பட்டது. அதேபோல் வங்கியில் 10 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரம்வரை எடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதே வேளையில் வங்கியில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரி செலுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியது.
இந்நிலையில், இன்று நடந்து வரும் நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கலின்போது, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது:-
கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 30 வரை 1.09 கோடி வங்கி கணக்குகளில், ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
2015 – 16ம் ஆண்டில் 3.7 கோடி பேர் முறையாக வரிக்கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதில், 24 லட்சம் பேர் மட்டுமே ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுவதாக தகவல் அதளித்துள்ளனர். அதேபோல்ர, முன்கூட்டியே வருமான வரி செலுத்துவோர் 34% உயர்வாக உள்ளது.
6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன. இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2015 – 16ம் நிதியாண்டில் வரி மூலம் கிடைத்த மொத்த வருவாய் 17 சதவிதம் உயர்வாக உள்ளது. Demonetisation-ஆல் தனிநபர் வருமான வரி மீது முன்பதிவு வரி 34.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி, லட்சக்கணக்கில் அபகரித்து, சிட்பண்ட் மோசடி செய்யும் நிறுவனங்களை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.
ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கு மிகாமல் வரவு செலவுகளை கட்டுப்படுத்தி செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு இனி 25% வருமான வரி - 5% குறைக்கப்படும். அதேபோல், ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாது.