
நாடாளுமன்றத்தில்2017-18 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் தனி நபருக்கான வருமான வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதற்கு முன் 10 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டு வந்தது. இதை 5 சதவீதமாக குறைத்து மத்திய நிதிஅமைச்சர் ஜெட்லி அறிவித்துள்ளார். அதாவது இனி ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்கள் 5 சதவீதம் வரி செலுத்தினாலே போதுமானது.
அதிலும், வீட்டு வாடகை, குழந்தைகளின் படிப்புச்செலவு, மருத்துவச்செலவு, எல்.ஐ.சி. காப்பீடு செலுத்திய ப்ரீமியம் , தபால்நிலைய ேசமிப்பு திட்டம் ஆகியவை இருந்தால், இந்த 5 சதவீத வரியும் செலுத்தத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.