பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் மாற்றம்...!!!

First Published Jul 17, 2017, 4:37 PM IST
Highlights
parappana agrahara inspector changed


பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து டிஜி, டிஐஜியை தொடர்ந்து கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Latest Videos

இதைதொடர்ந்து, சிறையில் உள்ள சசிகலா, தனது பங்களாவில் இருப்பது போலவே ஆடம்பரமாக இருப்பதற்கு,சிறைத்துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக, கர்நாடக சிறைத்துறை அதிகாரி டிஐஜி ரூபா புகார் செய்தார்.

இதையடுத்து கர்நாடக முதலமைச்சர் விசாரணை குழு அமைக்கப்படும் எனவும் அதுவரை செய்தியாளர்களை சந்திக்க கூடாது எனவும் உத்தரவிட்டார்.

அதையும் மீறி ரூபா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். இதைதொடர்ந்து சிறைத்துறையில் இருந்த டிஐஜி ரூபா போக்குவரத்து துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும் சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணனும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஏ.எஸ்.என் மூர்த்தி கர்நாடக சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து டிஜி, டிஐஜியை தொடர்ந்து கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக புதிய காவல் கண்காணிப்பாளராக ஆர்.அனிதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

click me!