"கண்ணியமான விவாதங்களை எம்.பி.க்கள் நடத்துவார்கள்" - பிரதமர் மோடி நம்பிக்கை

Asianet News Tamil  
Published : Jul 17, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 12:53 AM IST
"கண்ணியமான விவாதங்களை எம்.பி.க்கள் நடத்துவார்கள்" - பிரதமர் மோடி நம்பிக்கை

சுருக்கம்

modi speech about all party MP

ஜி.எஸ்.டி. வரிச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் காட்டிய உத்வேகம், ஒற்றுமை, வளர்ந்து இந்த மழைக்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும். அனைத்து அரசியல் கட்சிகளும் மிகவும் கண்ணியமான முறையில் விவாதங்கள் நடத்தி கூட்டத்தொடருக்கு மதிப்பு சேர்பார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்நாளான நேற்று, மறைந்த எம்.பி.க்களுக்கு அஞ்சலிக்கு செலுத்தப்பட்டு மக்களவை, மாநிலங்கள் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, நாடாளுமன்றத்துக்கு வௌியே பிரதமர் நரேந்திர மோடி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. கோடை காலத்துக்கு பின், வானத்தில் இருந்து பெய்கின்ற மழை, மண்ணில் பட்டு, அருமையான மண்வாசனையை தர உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியை(ஜி.எஸ்.டி.) வெற்றிகரமாக நிறைவேற்றி அமல்படுத்தியதற்கு பின் இந்த மழைக்காலத் தொடர் தொடங்குவதால், அனைவருக்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறேன்.

நாட்டின் நலனை முன்னிறுத்த முக்கிய முடிவுகள எடுக்கவும், எம்.பி.க்கள் மிகவும் கண்ணியமான முறையில் விவாதிக்கவும், கூட்டத்தொடருக்கு மதிப்பு சேர்க்கவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த மழைக்காலக் கூட்டத்தொடர் சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

அனைத்து அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், ஜி.எஸ்.டி. வரி மசோதா நிறைவேறியுள்ளது. நாட்டின் நலனுக்காக அனைத்து அரசு துறைகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றுகிறது.

நாட்டின் நலனை மனதில் வைத்து அரசும், அரசியல் கட்சிகளும் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, பொதுநலனுக்கு கடமைப்பட்டுள்ளோம் என்பது முன்னிறுத்தி செயல்படுவதை காட்டுகிறது. அது ஜி.எஸ்.டி. வரி மசோதாவை நிறைவேற்றி, நடைமுறைப்படுத்தியபோது வௌிப்பட்து. ஜி.எஸ்.டி. சட்டத்தை நிறைவேற்ற இருந்த அந்த உத்வேகம் ஒற்றுமை வலிமை அடைந்து வளர்ந்து வருகிறது. அது உத்வேகம் மழைக்காலக் கூட்டத்திலும் தொடரும் என நம்புகிறேன்.

இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியமானது. வரும் ஆக்ஸட் 15-ந்தேதியோடு நாம் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஆகஸ்ட் 9-ந்தேதியோடு, வௌ்ளையனே வௌியேறு இயக்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைகிறது.

நாட்டிலேயே மழைக்காலக் கூட்டத்தொடர் முக்கியத்துவமான காலத்தில் வருகிறது. மக்களின்  கவனம் இதில் இருக்கும் என்பதால், அதிகமாக கூட்டத்தொடரை கவனிப்பார்கள். விவசாயிகளின் கடினமான உழைப்பால், நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு என் வணக்கத்தை செலுத்துகிறேன். அந்த விவசாயிகளை நினைவு கூர்ந்து கூட்டத்தொடர் தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

அதிசயம்! 10வது மாடியில் இருந்து விழுந்தும் உயிர் தப்பிய முதியவர்.. குஜராத்தில் பகீர் சம்பவம்!
ராணுவ வீரர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த அனுமதி! ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை!