உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி பரிசு! ஆவேசமான உ.பி. சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா!

By SG Balan  |  First Published Sep 4, 2023, 6:35 PM IST

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியதால் உதயநிதி ஸ்டாலின் பேயாகிவிட்டார் என்றும் அவரது தலையைக் கொண்டுவந்தால் ரூ.10 கோடி தருவதாகவும் உ.பி. சாமியார் சூளுரைத்துள்ளார்.


கடந்த சனிக்கிழமை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னையில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சநாதன தர்மத்தை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

"கொசு, டெங்கு, கொரோனா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது ஒழித்து கட்ட வேண்டும், அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது ஒழிக்க வேண்டும். அதுதான் நாம் செய்யவேண்டியது." என்று வலியுறுத்தினார்.

Tap to resize

Latest Videos

2 மணிநேரத்தில் 61,000 மின்னல்கள்... 12 பேர் பலி... ஒடிசாவை மிரட்டிய அசாதாரண வானிலை!

अयोध्या के तपस्वी छावनी पीठाधीश्वर जगतगुरु परमहंस आचार्य ने उदयनिधि स्टालिन का सिर कलम करने वाले को 10 करोड़ का इनाम देने की घोषणा की। pic.twitter.com/rY76qcTCNY

— SATENDRA SHARMA (@SatendraLive)

உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியிருக்கும் ஜெகத் குரு பரமஹம்ச ஆச்சார்யா, உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டுவருபவர்களுக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவிக்கிறேன். அவரது தலையை யாரும் கொண்டு வரவில்லை என்றால், என் கையால் நானே அவரது தலையைத் துண்டிப்பேன். அதற்காக என் வாளையும் தயார் செய்துவிட்டேன்" எனக் கூறியுள்ளார்.

அயோத்தியைச் சேர்ந்த இந்த சாமியார் உதயநிதி ஸ்டாலினுக்கு மற்ற மதங்களைப் பற்றி அதே மாதிரி பேசத் துணிச்சல் இருக்கிறதா, மற்ற மதங்களைப் பற்றி இப்படிச் சொன்னால் தலை போயிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். சனாதன தர்மம் மனிதாபிமானம், அகிம்சை என்பதை வலியுறுத்துகிறது என்றும் நாங்கள் மனிதநேயம் கொண்டவர்கள் ஆனால் பேய்களையும் கொல்வோம் என்றும் பேசியுள்ளார்.

ஜெகன் பாண்டியனை திமுக வன்முறையால் வீழ்த்தியிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு

"உதயநிதி ஸ்டாலின் பேயாகிவிட்டார். அவர் என் கையால்தான் கொல்லப்படுவார்" என்றும் ஆவேசமாக சூளுரைத்துள்ளார் அந்த உ.பி. சாமியார். ஜகத்குரு பரம்ஹன்ஸ் ஆச்சார்யா என்று சொல்லப்படும் இவர் இதேபோன்ற பல சர்ச்சை பேச்சுகளை பேசி வரலாறு கொண்டவர்.

இதேபோல சர்ச்சை கருத்துகளை உதிர்த்தும், கொலை மிரட்டல் விடுத்தும், வெகுமதிகளை அறிவித்தும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். ராமசரித மனாஸுக்கு எதிராக கருத்து தெரிவித்த பீகார் அமைச்சரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். 'பேஷாரம் ரங்' பாடல் தொடர்பான சர்ச்சையின்போது, பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு எதிராகவும் மிரட்டல் விடுத்தார். நடிகர் ஷாரூக் கானை நேரில் சந்தித்தால் உயிருடன் எரித்து விடுவேன் என்று பேசினார். 

பிரதமர் மோடி 9 வருஷமா ஒரு நாள் கூட லீவு எடுக்கலயாம்! உழைத்துக்கொண்டே இருக்கிறாராம்!

click me!