
மத்திய அரசு பல்வேறு கட்டுபாடுகளை கடந்த மூன்று நாட்களாக கொண்டு வருகிறது. கடந்த 8 ஆம் தேதி முதல் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. இந்த பணத்திற்கு மாற்றாக புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளனர்.
இந்த புதிய திட்டத்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண சிலவுக்கே பணமில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பழைய ரூபாய் தாள்களை மாற்ற வழி இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பணம் வைத்திருப்போர் நகைகளில் முதலீடு செய்ய இறங்கியுள்ளனர்.
திருமண முகூர்த்தநாள் என்பதால் நகைகளை வாங்க முடியாமல் பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.நகைகள் வாங்குபவர்கள் கட்டாயம் பான் கார்டு இல்லாமல் வாங்கக்கூடாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பான் கார்டு இல்லாமல் நகை வாங்க முடியாது என அரசு அறிவித்துள்ள நிலையில் மத்திய தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திடீரென பான் கார்டு இல்லாமலும் நகை வாங்கலாம் என்று அறிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவரிடம் இது போன்ற கட்டுபாடுகள் சாதாரண மக்களை பாதிக்காதா? திருமண முகூர்த்த நேரம் பான் கார்டு இல்லாத மக்கள் என்ன செய்வார்கள் எப்படி நகை வாங்குவார்கள் என்ற கேள்விக்கு நகை வாங்குவதை முறைப்படுத்த பான் கார்டு மூலம் வியாபாரம் செய்ய நகைக்கடைக்காரர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
பான் கார்டு இல்லாதவர்கள் எதாவது ஒரு அடையாள அட்டையை கொடுத்து நகை வாங்கிக்கொள்ளலாம். எதாவது ஒரு அடையாள அட்டையை வாங்கி கொண்டு நகையை விற்பனை செய்யுங்கள் என்று கூறியுள்ளோம். கட்டாயம் பில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு அடையாள அட்டை கூட இல்லாமல் யாரும் இருக்க முடியாது. ஆகவே எதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்துதான் நகை வாங்கவேண்டும் என்று கூறியுள்ளோம் என்றார். இதன் மூலம் பான்கார்டு இல்லாமல் நகை வாங்கலாம் என மத்திய அமைச்சரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.