"நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் உங்களை விட்டு போகாது" – விளமபரம் மூலம் பிரதமர் மோடி உறுதி

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 03:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
"நீங்கள் உழைத்து சம்பாதித்த பணம் உங்களை விட்டு போகாது" – விளமபரம் மூலம் பிரதமர் மோடி உறுதி

சுருக்கம்

கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்கள் பணம் பறிபோகாது. ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதன் மூலம் வரி ஏய்ப்பு மற்றும் கருப்பு பணத்தை முடக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, குருவிபோல பணத்தை சிறுக சிறுக சேர்த்து வைத்த பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்றுவதற்கு பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். அவசர தேவைக்கு வங்கிக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே பணத்தை வைத்திருந்தவர்களும், வங்கியில் கணக்கு இல்லாமல் பணத்தை வைத்திருந்தவர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால், தற்போது வங்கியில் பணத்தை செலுத்தினால், அதற்கு வருமான வரித்துறையினர், வரி செலுத்தும்படி கூறுவார்கள் என திணறி வந்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் வங்கியில் 500 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த பெண் ஒருவர், தனது மகனுடன் சென்றார். அப்போது, வங்கி ஊழியர்கள் அந்த பணம் செல்லாது என கூறினர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை பரிசோதனை செய்தபோது, மாரடைப்பால் இறந்தார் என தெரிந்தது. இச்சம்பவம் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருந்த பெரும் முதலைகள், பல்வேறு பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் கொட்டியும், சுடுகாடுகளிலும் கொட்டி தீயிட்டு எரித்தனர். பல இடங்களில் மூட்டைகளில் கொட்டி, குப்பையோடு குப்பையாக போட்டுவிட்டனர்.

கருப்பு பணத்தை முடக்குவதற்காக மத்திய அரசு அறிவித்துள்ள இந்த திட்டம், மக்களுக்கு நன்மை செய்யும் என்பது ஒரு வகையில் அமைந்தாலும், மற்றொருபுறம் அவர்களுக்கு அல்லல் படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் கஷ்டப்பட்டு சம்பாதித்த உங்களது பணம் நிச்சயம் பாதுகாப்பாக உள்ளது. யாரும் அச்சப்படவும், பயப்படவும் தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

சிறு வியாபாரிகள், இல்லத்தரசிகள், கலைஞர்கள், பணியாளர்கள் உள்பட பணத்தை சேர்த்து வைத்துள்ள யாரும் அச்சப்பட தேவையில்லை என அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த பிறகே, கோடிக்கணக்கான மக்களின் மனதில் பால் வார்த்தது போல் இருந்தது.

அந்த அறிக்கையில், ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்வதற்கு வருமான வரித்துறைக்கு தெரிவிக்க மாட்டோம். அவர்ள் மூலம் தொந்தரவு அலலது விசாரணை எதுவும் இருக்காது. அனைத்து உண்மையான குடிமக்களும் கவலைப்பட வேண்டாம். விவசாயிகளின் வருமானத்துக்கு வரி இல்லை. உங்களது பணத்தை தைரியமாக டெபாசிட் செய்யலாம்.

உங்களது பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எந்த ஒர உச்ச வரம்பும் இல்லாமல் டிசம்பர் 30ம் தேதி வரை வங்கி அல்லது, தபால் நிலையத்தில் டெபாசிட் செய்யலாம்.

தொடக்கத்தில் நீங்கள் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் அலலது ஒருவாரத்துக்கு ரூ.20 ஆயிரம் வரை எடுக்கலாம். இந்த உச்ச வரம்பு சிலநாட்களுக்கு பிறகு உயர்த்தப்படும்.

அனைத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் உங்களது அடையாள அட்டையை காண்பிப்பதன் மூலம் நீங்கள் வரும் 24ம் தேதி வரை ரூ.4000 வரை பழைய ரூபாயய் நோட்டுகளை மாற்றி கொள்ளலாம்.

செக், டிடி, டெபிட், அல்லது கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்க்கிங் மூலம் நிதி மாற்றம் எந்த வகையிலும் பணத்துக்கு தடையில்லை. இவற்றை பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்கப்படுத்துகிறோம்.

ஏடிஎம்களில் 18ம் தேதி வரை ஒரு கார்டுக்கு ஒரு நாளைக்கு ரூ.2000 வரையும், 19ம் தேதி வரை ரூ.4000 வரையும் எடுக்கலாம். இவை வரும் நாட்களில் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

இதனால், குருவி போல் பணத்தை சேர்த்து வைத்த பொதுமக்கள், நிம்மதி பெரு மூச்சு விட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

இனி இஷ்டத்துக்கு புக் பண்ண முடியாது.. சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்: 21 நாட்கள் கட்டாய இடைவெளி
குடியரசுத் தலைவரை அவமதித்ததா மேற்கு வங்க அரசு? பிரதமர் மோடி கண்டனம்! மம்தா விளக்கம்!