பிரபல பின்னணி பாடகி தந்தை மரணம் .. கொலை வழக்கு பதிந்து போலீசார் விசாரணை..

By Thanalakshmi VFirst Published Nov 26, 2021, 6:39 PM IST
Highlights

பிரபல பின்னணி பாடகி ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ் பெங்களூரு ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது தொடர்பாக பெங்களூர் ரயில்வே போலீசார் கொலை வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தெலுங்கு திரையுலகில் முன்னணி பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஹரிணி ராவ். இவரது  தந்தை ஏ.கே.ராவ்.  பெங்களூருவில் யெலஹங்கா மற்றும் ராஜானுகுண்டே இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் கடந்த 22 ஆம் தேதியன்று, ஏ.கே.ராவின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. மேலு அவரது நெற்றி, மணிக்கட்டு மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து கத்தி மற்றும் ஒரு ஜோடி கத்தரிக்கோல் ஆகியவற்றை மீட்டுள்ளனர். இதனையடுத்து பெங்களூரு நகர ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.


ஏ.கே.ராவ் , எம்.பி. சுஜானா சவுத்ரியின் சுஜனா குழுமத்தின் சிஎஸ்ஆர் பிரிவான சுஜனா அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஏ.கே.ராவ், வணிகப் பயணமாக நவம்பர் 13 முதல் பெங்களூரு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடைசியாக நவம்பர் 19ஆம் தேதியன்று ராவ் தன்னிடம் பேசியதாக ஹரிணியின் சகோதரி போலீஸிடம் கூறியுள்ளார்.  

காவல்துறையினர் தனது அறிக்கையில், நவம்பர் 13 ஆம் தேதி பெங்களூரு வந்த ராவ், அன்று ஒரு ஹோட்டலுக்குச் அறை எடுத்து தங்கியுள்ளார்.அவர் நவம்பர் 21ஆம் தேதியன்று தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து வண்டியை முன்பதிவு செய்துள்ளார் என கூறியுள்ளனர். மேலும் மறுநாள் அவரது உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. முக்கியமாக,  அவரது நெற்றியில் காயங்கள்,  மணிக்கட்டு மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டுக் காயங்கள் இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து கத்தி மற்றும் ஒரு ஜோடி கத்தரிக்கோல் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் உடலில் காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மர்மானமுறையில் உயிரிழந்த ராவ் உடல் , உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வந்த பிறகே, மேற்கொண்டு விசாரனை நடத்தப்படும் எனவும் கூறினர்.

மேலும் ராவ், குறிப்பிட்ட நிதி நிறுவனத்தில் 2 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களுக்கு உதவி புரிந்ததாகவும் ராவ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக பண தகராறில், அவர் கொலை செய்யபப்ட்டுள்ளாரா? எனும் கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் மாதம், தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு  அவரது காரில் எரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!