இந்தியாவுக்கு எதிராக வாலாட்டினால் அதோகதிதான்..! பாகிஸ்தானுக்கு சிஐஏ அதிகாரி எச்சரிக்கை..!

Published : Oct 25, 2025, 01:53 PM IST
Pakistan

சுருக்கம்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உண்மையான போரில் எதுவும் நல்லதல்ல. ஏனென்றால் பாகிஸ்தானியர்கள் தோற்பார்கள். நான் அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசவில்லை. நான் ஒரு வழக்கமான போரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.

'இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு வழக்கமான போரிலும் நீங்கள் தோற்பது உறுதி’’ என பாகிஸ்தானுக்கு முன்னாள் சிஐஏ அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ, பாகிஸ்தானுக்கு அளித்துள்ள ஆலோசனையில், ‘‘இந்தியாவுடனான போரினால் பாகிஸ்தானுக்கு எந்தப் பலனும் கிடைக்காது என்ற கொள்கை முடிவுக்கு வர வேண்டும்’’ என்று கூறியுள்ளார். 2001 நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு, இந்த தாக்குதல்களுக்குப் பிறகு இரண்டு அணு ஆயுத நாடுகளும் போருக்குச் செல்லும் என்று மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ நம்பியதை அவர் மேலும் நினைவு கூர்ந்துள்ளார்.

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உண்மையான போரில் எதுவும் நல்லதல்ல. ஏனென்றால் பாகிஸ்தானியர்கள் தோற்பார்கள். நான் அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசவில்லை. நான் ஒரு வழக்கமான போரைப் பற்றி மட்டுமே பேசுகிறேன். தொடர்ந்து இந்தியர்களைத் தூண்டிவிடுவதால் எந்தப் பயனும் இல்லை" என்று முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ, ஏஎன்ஐக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் இந்தியாவுடன் பகிரப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த கிரியாகோவ், “பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதாகப் பகிரங்கமாகப் பறைசாற்றியது. ஆனால், பாகிஸ்தான் அணு ஆயுதங்களின் முழு கட்டுப்பாடும் அமெரிக்காவிடம் உள்ளது. இதை அமெரிக்கர்கள் எப்போதாவது இந்தியாவிடம் கூறியிருப்பார்களா? என்று நான் சந்தேகிக்கிறேன். 

 

ஆனால், அமெரிக்க வெளியுறவுத்துறை இரு நாருகளிடமும், ‘‘நீங்கள் போராடப் போகிறீர்கள் என்றால், போராடுங்கள். ஆனால், சுருக்கமாக வைத்துக்கொண்டு, அணு ஆயுதமற்றதாக போராடுங்கள். அணு ஆயுதங்களை கையில் எடுத்தால் முழு உலகமும் மாறும்’’ என எச்சரித்து வருகிறது. எனவே இந்த விஷயத்தில் பாகிஸ்தான், இந்தியா என தரப்பினரிடமும் கட்டுப்பாடு இருப்பதாக நான் நினைக்கிறேன்" என்று கிரியாகோவ் கூறியுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!