
உத்தரப் பிரதேச மாநிலம் தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தனது 6 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த நண்பரின் பிறப்புறுப்பை அறுத்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு தானும் த*கொலை செய்துகொண்டிருக்கிறார்.
உள்ளூர் இசைக் குழு ஒன்றில் பணியாற்றும் 32 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். விவாகரத்துக்குப் பிறகு, அவர் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து, தனது நண்பரான ராம்பாபு யாதவ் (35) என்பவருடன் தங்கியிருந்தார். காலப்போக்கில், இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில், அந்த நபர் தனது 6 வயது மகளைத் தன்னுடன் தங்க வைத்திருந்தபோது, ராம்பாபு யாதவ் அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. சிறுமியிடம் இருந்து நடந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட தந்தை, கடும் ஆத்திரமடைந்தார்.
சிறுமியின் தந்தை தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை அறிந்து ராம்பாபுவை கண்டித்துள்ளார். அப்போது இருவரும் சண்டையிட்டுள்ளனர். ஆத்திரத்தின் உச்சியில் சிறுமியின் தந்தை, தனது நண்பரான யாதவின் பிறப்புறுப்பை அறுத்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த ராம்பாபு, தேவரியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோரக்பூரில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மகளின் பாலியல் வன்கொடுமை குறித்த புகாரின் பேரில், ராம்பாபு யாதவ் மீது போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின்போது, ராம்பாபு சிறுமியின் தந்தையுடன் தான் ஒருபால் உறவு கொண்டிருந்தது பற்றித் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த உறவு குறித்து பொதுவெளியில் தெரிந்ததால், அவமானம் என்று நினைத்த சிறுமியின் தந்தை த*கொலை செய்துகொண்டிருக்கிறார். இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் அவர் தனது அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவர் தூக்கியால் சுட்டு த*கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிறுமி தற்போது அவரது தாயின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சிறுமிக்கு மருத்துவ சிகிச்சையும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் மற்றும் தடயவியல் அறிக்கைகளுக்காகக் காத்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.