
வடமாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் பின்னணியில் சதி செய்ததாக பாகிஸ்தான் உளவு அமைப்பின், ஏஜெண்டான Shamshul Huda என்பவரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-ன் முகவராக செயல்பட்டு வரும் Shamshul Huda என்பவர், பிஹார், உத்தரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய பகுதிகளில் அண்மையில் நடைபெற்ற ரயில் விபத்துகளின் பின்னணியில் மூளையாக செயல்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
எனவே இவரைக் கைது செய்ய இந்திய உளவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டு விமானநிலையத்தில் வந்திறங்கிய Shamshul Huda-வை, இந்திய உளவுத்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இந்த தகவலை நேபாள காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட Shamshul Huda-விடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி, கான்பூரில், இந்தூர் - பாட்னா விரைவு ரயில் தடம் புரண்ட விபத்தில் 150 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.