
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால், ஏற்பட்ட பணத்தட்டுப்பாடு காரணமாக தம்பதிகள் தங்கள் குழந்தை பெற்றும் எண்ணத்தைக் கூட தள்ளி வைத்துவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மொராதாபாத், முசாபர் நகர் ஆகிய பகுதிகளில் அதிக ஆளவில் சோதனைக்குழாய் சிகிச்சைக்கும், கருவுறு சிகிச்சைக்கும் அதிக அளவில் பெண்கள் வரும் நிலையில், அது குறைந்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ரூபாய் நோட்டுதடை
நாட்டில் உள்ள கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க புழக்கத்தில் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் இருக்கும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மாற்ற பெரும் சிரமப்பட்டனர். வங்கிக்கணக்கில் பணம் இருந்தும், அதை அவசரத் ேதவைக்கு கூட எடுக்கமுடியாமல் திணறினர்.
தள்ளிவைப்பு
நாடுமுழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. இந்த சூழலில் ப தம்பதிகள் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைக் கூட தள்ளி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
6 மாதத்துக்கு பிறகு
புதுடெல்லி மற்றும் காஜியாபாத் பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் அஞ்சலி சவுத்ரி கூறுகையில், “ பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடைக்கு பின் எங்கள் மருத்துவமனைக்கு சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பு செய்ய வரும் தம்பதி எண்ணிக்கை 80 சதவீதம் குறைந்துவிட்டது. எங்களிடம் முன்பு கலந்தாய்வு செய்து விட்டு ெசன்றவர்கள், இன்னும் 6 மாதம் சென்றபின் குழந்தை பெறலாம் என்று தெரிவித்துச் சென்றனர். மக்கள் தாங்கள் சேர்த்து வைத்து இருந்த பணத்தை, அவசரத் தேவைக்கு மட்டும் பயன்படுத்த ஒதுக்கி வைத்தனர்.
வருகை குறைந்தது
பெரும்பாலும் சிறிய நகரங்களில் இருந்துதான் மருத்துவ சிகிச்சைக்கு வருவார்கள், சோதனைக்குழாய் கருத்தரிப்பை ரகசியமாக வைத்திருக்க கோருவார்கள். ஆனால், இப்போது குழந்தைபேற்றுக்காக வரும் தம்பதி வருகை பெருமளவு குறைந்துவிட்டது.
அவசரத்தேவை
மருத்துவ சிகிக்சைக்கு செலவு செய்வதை விட, தங்களின் சேமிப்பை அவசரச் செலவுக்கு பயன்படுத்தவே மக்கள் இப்போது விரும்புகின்றனர். வங்கியில் பணம் கிடைப்பதும், ஏ.டி.எம்.களில் பணம் கிடைப்பதும் கடினமாக இருக்கிறது என்பதால், குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தை தள்ளி வைத்துள்ளனர்'' எனத் தெரிவித்தார்.
விற்பனை மோசம்
மேலும், செயற்கை கருவூட்டலுக்கு மருந்துகள், மாத்திரைகள் சப்ளை செய்யும் மருந்து நிறுவனங்களான மெரிக் மற்றும் இன்டாக்ஆகியவற்றின் விற்பனையாளர்கள் கூறுகையில், “ கடந்த 3 மாதங்களாக செயற்கை கருவூட்டலுக்கான மருந்து விற்பனை 25 சதவீதம் குறைந்துவிட்டது. குறிப்பாக வட இந்தியா இந்தியா நகரங்களில் பெருமளவு விற்பனை குறைந்துவிட்டது. தென்மாநிலங்கள் அதைக் காட்டிலும் மோசம்'' என்று தெரிவிக்கின்றனர்.