வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம் என பட்ஜெட் தாக்கலில் போது மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். அதற்கு பிரதமர் மோடி விடாமல் மேஜையை தட்டி ஊக்கப்படுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று 2018-19 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது, நாங்கள் பதவியேற்கும் போது நாடு ஊழலில் மூழ்கி கிடந்தது எனவும் தற்போது உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியாவை மாற்றியுள்ளோம் எனவும் தெரிவித்தார். பணமதிப்பு நீக்கம் மூலம் கருப்பு பணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் வலிமை பெற்றுள்ளது எனவும் ஜி.எஸ்.டி.யால் மறைமுக வரி அமைப்பு எளிதாகியுள்ளது எனவும் குறிப்பிட்டார். நலிந்தோருக்கு நன்மை செய்யும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமையும் எனவும் கிராமப் பகுதிகளுக்கு மின்சார வசதி அளிப்பதன் மூலம் ஏழைகள் வாழ்வில் ஒளியேற்றுகிறோம் எனவும் அருண் ஜெட்லி தெரிவித்தார். வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது எனவும் கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம் எனவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார். அப்போது இவை அனைத்தையும் கேட்டுகொண்டிருந்த பிரதமர் மோடி அருண்ஜெட்லி பேசிய ஒவ்வொரு வாக்கியத்திற்கும் விடாமல் மேஜையை தட்டி ஊக்கப்படுத்தினார்.