ராகுல் காந்தி பிரதமரானால் ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதத்திற்கு மேல் விதிக்கப்படாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.குற்றச்சாட்டுகள்மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் சிறு மற்றும் குறு வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்த வரி விதிப்பை கண்டித்து பல்வேறு தொழில் புரிவோர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜி.எஸ்.டி. வரியால் பொருட்களின் விலை குறையும் என்று மத்திய அரிசு தெரிவித்தாலும், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில தலைவர் ராஜ் பப்பர் நேற்று பரேலியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது-மீண்டும் விவாதம்நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி பதவி ஏற்ற பின்னர் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து மீண்டும் விவாதிக்கப்படும். அதன் பின்னர் ஜி.எஸ்.டி.-யின் அதிகபட்ச வரி விதிப்பு 18 சதவீதமாகத்தான் இருக்கும். இதனால் விவசாயிகள், இளைஞர்கள், சிறு தொழில்களை செய்பவர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பெறுவார்கள். ராகுல் காந்தி பிரதமர் ஆன பின்னர் மத்திய பாஜக அரசு செய்திருக்கும் தவறுகள் அனைத்தும் வெளிப்படும்.வேருடன் அழிக்க…நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வருவதற்காக பாஜகவை வேருடன் அழிப்பதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும். இளைஞர்களை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தவறாக வழி நடத்துகிறது. இதுபற்றி காங்கிரஸ் தொண்டர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொய்களையும், நாடகத்தையும் நடத்தும் பாஜக தலைவர்களை எதிர்கொள்ளும் சக்தி மிக்க கட்சி நிர்வாகிகளை தொண்டர்கள் கண்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.