Adani Issue: அதானி விவகாரத்தால் நாடாளுமன்றம் முடக்கம்:தீவிரமாகும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

By Pothy RajFirst Published Feb 6, 2023, 12:35 PM IST
Highlights

பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகள், தில்லுமுல்லு தொடர்பாக ஹிண்டன்பர்க்ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டஅ றிக்கை தொடர்பாக நாடாளுமன்றக் கட்டுக்குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலைமுன் இன்று போராட்டம் நடத்தினர்.

பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகள், தில்லுமுல்லு தொடர்பாக ஹிண்டன்பர்க்ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டஅ றிக்கை தொடர்பாக நாடாளுமன்றக் கட்டுக்குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலைமுன் இன்று போராட்டம் நடத்தினர்.

இதனால் இன்று மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது. 

அதானி குழுமம் பங்குச்சந்தையில் பல்வேறு மோசடிகள், தில்லுமுல்லுகள் செய்தது தொடர்பாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்தவாரம் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமப் பங்குகள் பங்குச்சந்தையில் மோசமான சரிவைச்சந்தித்தன.

பங்குச்சந்தையில் அதானி குழுமத்துக்கு ஏறக்குறையரூ.10 லட்சம் கோடிவரை இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடங்கிய நிலையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாக எழுந்துள்ள புகாரை விசாரிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அல்லது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை  இதில் ஏதாவது ஒன்றை நடைமுறைப்படுத்தக் கோரி எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.

வெடித்த அதானி விவகாரம்: உடும்புபிடியில் எதிர்க்கட்சிகள்! நாடாளுமன்றம் நாள்முழுவதும் ஒத்திவைப்பு

இந்த கோரிக்கை தொடர்பாக பட்ஜெட் தாக்கலுக்குப்பின் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.

இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைமுன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று காலை முதல் அமர்ந்து தர்ணாப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னதாக நாடாளுமன்றம் தொடங்கும் முன் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூடி ஆலோசனை நடத்தினர். அப்போது அதானி விவகாரத்தில் ஒருமித்த கருத்துடன் செயல்படுவது என தீர்மானித்தனர்.

கர்நாடக பாஜக எம்.பி.சொத்து 4,186% உயர்வு!10 ஆண்டுகளில் 71 எம்.பி.க்கள் சம்பாத்யம் 286% அதிகரிப்பு:ஏடிஆர் ஆய்வு

மாநிலங்களவை காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, திமுக, என்சிபி, பிஆர்எஸ், ஜேடியு, சமாஜ்வாதி, சிபிஎம், சிபிஐ, ஜேஎம்எம், ஆர்எல்டி, ஆர்எஸ்பி, ஏஏபி, ஐயுஎம்எல், ஆர்ஜேடி, சிவசேனா கட்சிகள் ஆலோசனையில் பங்கேற்றன.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் புறக்கணித்தாலும், போராட்டத்தில் பங்கேற்றனர். நாடாளமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் கூடிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கைகளில் பாதைகளை ஏந்தி கோஷமிட்டனர். “ அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அல்லது உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை” என முழக்கமிட்டனர். எல்ஐசி, எஸ்பிஐ வங்கியில் உள்ளமக்கள் பணத்தை பாதுகாக்க வேண்டும் என கோஷமிட்டனர்.

மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில் “ நாடளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளோம். முதலில் அதானி விவகாரத்தை விவாதித்துவிட்டு மற்ற விவகாரங்களை பேசலாம். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப அரசுக்கு விருப்பமில்லை. இதை தவிர்க்கவே அரசு விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

உஷார்! நாய் கடித்ததற்காக, 12 ஆண்டுகளுக்குப்பின் உரிமையாளருக்கு 3 மாத சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கூறுகையில் “ வழக்கமான அலுவல்களை ஒத்திவைத்து, அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவைத் த லைவரிடம் நோட்டீஸ்அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மக்களின் பணம் எவ்வளவு இழக்கப்பட்டது என்பது குறித்து அவையில் பிரதமர்மோடி விளக்கம்அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் எம்பிக்கள் பிரமோத் திவாரி, அமி யாஜ்னிக் ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்அளித்துள்ளனர்


 

click me!