From The India Gate: அமித் ஷா ட்ரீட்மெண்டும் அமர்த்தியா சென்னுக்குக் கிடைத்த ஆதரவும்

By Asianet TamilFirst Published Feb 6, 2023, 11:29 AM IST
Highlights

ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று சுவராஸ்யமான பட்ஜெட் அவையில் நடந்த விஷயங்களுடன் இதோ உங்களுக்கான 12வது எபிசோட்.

அமித் ஷா ட்ரீட்மெண்ட்

கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னா யார்? இவர் யாருமில்லை முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் முருகேஷ் நிரானி போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து பகிரங்கமாக பேசி வந்தவர். ஆனால், இப்போது யத்னாலின் அமைதிக்கு யார் காரணம்?

அண்மையில் டெல்லி சென்று வந்த பின்னர் அவர் அமைதி ஆகிவிட்டார். டெல்லியில் நிலவும் குளிரால் அவரது குரல் அடங்கியது என்று முதலில் நினைத்தார்கள். ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா அவருக்கு கடுமையான எச்சரிக்கை கொடுத்திருப்பதுதான் காரணம் என்று தெரிய வந்திருக்கிறது.

அனல் பறக்கப் பேசக்கூடிய அமித் ஷாவின் அறிவுரையால் இப்போது அமைதியாக இருக்கிறார். இதில் அவருக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார். பஞ்சமசாலி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கும் பிரச்சினைக்கு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக உள்கட்சி விவகாரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். யத்னால் இந்த இட ஒதுக்கீட்டுக்காக தீவிரமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யத்னால் இரண்டாவது முறையாக அமித் ஷாவால் எச்சரிக்கப்பட்டுள்ளார் என்று சொல்கிறார்கள். யத்னாலுக்கு ஆதரவாளர்கள் பலம் குறைவு. ஆர்எஸ்எஸ் அமைப்பிலும் நண்பர்கள் அதிகம் இல்லை. அவருக்கு ஆதரவாக உள்ளவர் மூத்த தலைவர் அனந்த் குமார்தான். யத்னால் வாஜ்பாய் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தவர் என்றாலும் அப்போதும் இவரது நடவடிக்கைகளால் அத்வானி பஞ்சாயத்து செய்ய வரவேண்டிய நிலைதான் இருந்தது.

உஷார்! நாய் கடித்ததற்காக, 12 ஆண்டுகளுக்குப்பின் உரிமையாளருக்கு 3 மாத சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

அமர்த்தியா சென் மம்தா

மத்திய அரசைத் தாக்கும்போதெல்லாம் அவரது துணிச்சல் நமக்குத் தெரியும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சாத்தியமான ஒவ்வொரு வாய்ப்பையும் மத்திய அரசையும் அதன் கொள்கைகளையும் குறை சொல்ல பயன்படுத்திக் கொள்கிறார்.

இப்போது அவருக்கு தோள்கொடுக்கும் ஒரு பிரபலத்தின் மூலம் மத்திய அரசை சாடியுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் தான்.

சமீபத்தில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் இருந்து அமர்த்தியா சென்னுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவர் பயன்பாட்டில் உள்ள நிலத்தை காலி செய்யும்படி அதில் கூறப்பட்டிருந்தது. இவ்வாறு நோட்டீஸ் அனுப்பப்பட்ட பலரில் இவரும் ஒருவர். அவர்கள் அனைவரும் ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆசிரியர்களின் வாரிசுகள் என்ற முறையில் அங்கு இடம் அளிக்கப்பட்டவர்கள்.

சென்னின் தாயார் அம்ரிதா சென் மற்றும் தாத்தா க்ஷிதி மோகன் சென் ஆகியோர் ரவீந்திரநாத் தாகூரின் நெருங்கிய நண்பர்கள். க்ஷிதி மோகன் விஸ்வ பாரதியின் இரண்டாவது துணைவேந்தராக இருந்தார்.

அமர்த்தியா சென் தான் சட்டப்பூர்வ வாரிசு என்பதைக் காரணமாகக் காட்டி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நிலத்தைத் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டார். முதல்வர் மம்தா உடனடியாக சாந்திநிகேதனில் உள்ள அமர்த்தியா சென் வீட்டுக்குச் என்று அவரைச் சந்தித்தார்.

பின்னர் பேசிய மம்தா, அந்த நிலம் 1943ஆம் ஆண்டு சென் குடும்பத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதை பறிமுதல் செய்யவேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததற்கு பழிவாங்கும் வகையில்தான் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இதேபோல மம்தாவும் பல்கலைக்கழக அதிகாரிகளையும், மத்திய அரசின் பழிவாங்கும் அரசியலையும் கண்டித்துப் பேசினார். மம்தா தீதி போன்றவர்களிடம் இருந்துதான் பிரச்சினையை எப்படிப் பெரிதாக்க வேண்டும் என்ற கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால், தங்களை வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு மூன்றாம், நான்காம் தலைமுறை வாரிசுகள் பல்கலைக்கழக நிலத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதும் அவர்களே வேறு இடத்திலும் சொந்த நிலம் வைத்திருந்தும் பற்றி யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

சீனாவின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

மாம்பழம் நழுவி பாலில் விழுமா?

நாடாளுமன்றம், சட்டமன்றம் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர் தோல்விகளை சந்தித்து வந்த மாம்பழக் கட்சிக்கு வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலாவது தங்களது கட்சி சார்பாக எம்பிக்களை பெற வேண்டுமென உறுதியாக உள்ளது.

இதற்காக பல்வேறு காய்களை இரண்டு டாக்டர்களும் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆளுங்கட்சிக்கு எதிரான கருத்துகளை கடந்த சில மாதங்களாகவே இருவரும் தவிர்த்து வருகின்றனர். கிண்டியில் உள்ள மத்திய அரசின் பிரதிநிதியை ஆளுங்கட்சியோடு சேர்ந்து எதிர்க்கவும் செய்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காததற்கு தங்கள் சார்பாக கடும் கண்டனத்தையும் மாம்பழக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடருக்கு வந்த மத்திய அரசு பிரதிநிதிக்கு எதிராக வெளிநடப்பும் செய்து ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

ஆளுங்கட்சியோடு மாம்பழக் கட்சி கூட்டணிக்காகத்தான் இந்த திட்டம் போடுவதை அறிந்த மீசையை முறுக்கிக் கொண்டு இருக்கும் தலைவரின் கட்சி விரும்பவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஆளுநர் கொடுத்த விருந்து ஆளுங்கட்சி கலந்து கொள்கின்ற நிலையில் கூட்டணி கட்சியான மீசை முறுக்கும் தலைவரின் கட்சியானது முதலாக புறக்கணிப்பதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சி மாம்பழக் கட்சியை விரும்பும் நிலையில், மீசையை முறுக்கும் கட்சியின் தலைவரோ மாம்பழக் கட்சியை சேர்த்துக் கொள்வதை விரும்பாமல் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் எதிரணிக்கு ஜம்ப் அடிக்க கூடுமென தகவல் கூறுகிறது.

Dearness Allowance Hike: ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

தவறான ‘பார்க்கிங்’

தனது மகளின் திருமணத்திற்காக மிகவும் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு திருமணம் முடிந்த நிலையில், அந்த பாஜக தலைவர் சிக்கலில் சிக்கி இருக்கிறார். இந்த திருமண விழாவில் மொத்த உத்தரப்பிரதேசத்தின் விஐபிக்களும் கலந்து கொண்டனர். சமாஜ்வாடி கட்சியின் சாதனையாகக் கருதப்படும் லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவில் திருமணம் முடிந்து உணவும் பரிமாறப்பட்டது.

சமாஜ்வாடி கட்சியினர் உடனே சமூக ஊடகங்களில், தங்களது ஆட்சியின் சாதனையாகக் கருதப்படும் இடங்கள் பாஜக தலைவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று பதிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து, பாஜக தலைவர்கள் சிலர் இவருக்கு திருமணம் நடத்த வேறு இடமே கிடைக்கவில்லையா என்று கடிந்து கொள்ள துவங்கிவிட்டனர். இது தற்போது மகளின் திருமணத்தை முடித்த பாஜக தலைவருக்கு தலைவலியாக இருக்கிறது. மகளின் திருமணம் முடிந்துவிட்டது என்ற சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல், எதிர்கட்சியினர் தன்னை சிக்கலில் மாட்டிவிட்டனர் என்று புலம்பி வருகிறார்.

ஏணிப்படியின் இரட்டை நிலைப்பாடு

அரசியலில் செயல்பட்டுவரும் அனைவரும் படிப்படியாக முன்னேறி உயர்மட்டத்துக்குச் செல்வதுதான் நோக்கமாக இருக்கும். ஏணியை சின்னமாகக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் அதைத்தான் எதிர்பார்க்கிறது.

ஆனால், அந்தக் கட்சி இப்போது உள்கட்சி கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கையை தொடங்கி இருக்கிறது. குறிப்பாக மாநில அளவிலான புதிய நிர்வாகிகள் நியமனத்தில் அந்தக் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பி. கே. குஞ்ஞாலி குட்டிக்கு எதிரானவர்களுக்கு இடம் கிடைக்காது என சொல்லப்படுகிறது.

வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கும் அந்தக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். குஞ்ஞாலி குட்டிக்கு எதிரான, கே. எஸ். ஹம்சா, மே. எம். ஷாஜி, பி. எம். சாதிக் அலி போன்றவர்களுக்கு இடம் அளிக்கப்படாது என்று தெரிகிறது. எதிர்க்கட்சியில் விகிதாச்சார இடம் அளிக்க வேண்டும் என்று பேசும் கட்சி தங்கள் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் இவ்வாறு திட்டம் போடுவது அக்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

பி. எம். ஏ. சலாம் கட்சியில் செயலாளர் பொறுப்பில் நீடிப்பார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.

மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளையும் ஒத்த மனநிலை உடையவர்களாக நியமிக்க கட்சி திட்டமிட்டுள்ளது. அண்மையில் திருவனந்தபுரத்தில் ஒரு சினிமா நட்சத்திரத்தை கட்சியில் இணைக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், இந்த முயற்சியை கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் விரும்பவில்லை. இப்போது உள்ள சூழலில் முஸ்லீம் லீக் அவர்கள் எதிர்பார்க்கும் இலக்கை எட்டுவது நிறைவேறாத ஆசையாகவே இருக்கப்போகிறது.

Exclusive : பாஜகவில் சேரமாட்டேன்! - காங்.,லிருந்து விலகிய அனில் அந்தோனி பேட்டி!

கைவிடப்பட்ட குஜ்ஜார் சமுதாயம்

ராஜஸ்தானின் மாநிலத்தில் 40 சட்டசபை தொகுதிகளில் குஜ்ஜார் சமுதாயம் வலுவாக இருக்கிறது. ஆனாலும், தங்களுக்கு என்று வலுவான தலைவரை தேடி வருவது பரிதாபமாக இருக்கிறது.

இதுவரை, பெரும்பாலான குஜ்ஜார் தலைவர்கள், அரசியல் களத்தில் 'பைலட்' தலைவரை பின் தொடர்ந்து வந்தனர். ஆனால் அந்தத் தலைவர் உள்கட்சி அரசியலில் சிக்கியதால், அவர் நிலையே என்னவென்று தெரியாமல் சிக்கலில் இருக்கிறார்.

குஜ்ஜார் தலைவர்கள் தங்களுக்கு ஒரு புதிய தலைவர் தேவை என்பதை தற்போது உணர்ந்திருந்தாலும், அவர்களின் தேடல் பலனளிக்கவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி குஜ்ஜார் சமுதாயத்தினரிடம் ஒரு விழாவில் உரையாற்றினார். காங்கிரசில் முக்கியத்துவம் வகிக்கும் எந்த குஜ்ஜார் தலைவர்களும் இதற்கு அழைக்கப்படவில்லை. இது அவர்களை மிகவும் பாதித்துள்ளது. தங்களை முக்கியமற்றவர்களாக கருதிவிட்டதாக உணர்ந்துள்ளனர், விரைவில் ஒரு புதிய தலைவர் அடையாளம் காணப்படாவிட்டால், இந்த சமுதாயம் விரைவில் அரசியல் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்று வருந்தி வருகின்றனர். பூனைக்கு யார் மணிகட்டுவது கதைதான் இதுவும்.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மரணம்; பாஜகவை தாக்கிய சசி தரூர் - பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர் !

click me!