Rottweiler dog bite: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நாய் கடித்ததற்காக நாய் உரிமையாளருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Rottweiler dog bite: கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் நாய் கடித்ததற்காக நாய் உரிமையாளருக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாயைக் கவனக்குறைவாக வளர்த்து, அடுத்தவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்வகையில் நாயை பராமரித்தமைக்காக நாய் உரிமையாளருக்கு 3 மாதம் சிறை விதித்துள்ளது நீதிமன்றம்
மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஏஎன் பாட்டீல் இந்த தீர்ப்பை கடந்த மாதம் 3ம் தேதி வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பு நகல் நேற்றுதான் கிடைத்துள்ளது.
ஆதலால், நாய் உரிமையாளர்கள் தாங்கம் வளர்க்கும் நாய் மற்றொருவரைக் கடித்தால் வழக்குப் பாய்வது மட்டுமின்றி, சிறை தண்டனையும் கிடைக்கும் என்பது நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது.
காரின் குறுக்கே வந்த நாய்.. 70 கி.மீ தூரம்! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி - வைரல் வீடியோ !!
இந்த சம்பவம் கடந்த 2010ம் ஆண்டு நடந்துள்ளது. சைரஸ் பெர்சி ஹோர்முசுஜி(வயது44) என்பவர் ராட்வில்லர் ரக நாயை வளர்த்துள்ளார். இவருக்கும், அதே குடியிருப்பைச் சேர்ந்த கெர்சி இரானி என்பவருக்கும் இடையே சொத்துதகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் மும்பையில் உள்ள நீபன் கடற்கரைச் சாலையில் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது காருக்குள் இருந்த ஹோர்முசுஜி வளர்த்த ராட்வில்லர் நாய் காரிலிருந்து வெளியே வர முயன்றது. அப்போது கார் கதவை மோர்மோசுஜி திறந்தவுடன், கெர்சி இரானி மீது நாய் பாய்ந்து கடித்துக் குதறியது. இரானியின் வலது கால், கைகளில் நாய் கடித்துக் குதறியது.
இதையடுத்து, நாயை கடிக்க வைத்ததாக ஹோர்முசிஜி மீது இரானி மும்பை போலீஸில் புகார் அளித்தார். ஹோ்முசுஜி மீது ஐபிசி 337, 289ஆகிய பிரிவின்கீழ் மும்பை போலீஸார்வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 12 ஆண்டுகளுக்குப்பின் கடந்த மாதம் 3ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. மாஜிஸ்திரேட் பாட்டீல் அளித்த தீர்ப்பில் “ ராட்வில்லர் போன்ற ஆக்ரோமாஷமான நாயை வளர்ப்பதில் உரிமையாளர் அதிக கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.
ராட்வில்லர் நாய் ஆக்ரோஷமானது என்பது உரிமையாளருக்கும் தெரியும். அப்படியிருக்கும்போது, பொதுமக்களுக்கு ஆபத்துநேரும் வகையில் நாயை பராமரிக்க கூடாது. நாய்கடியால் பாதி்க்கப்பட்டவருக்கு 72 வயதாகி இருந்தது, வலிமையான, ஆக்ரோஷமான நாய் முதியவர் ஒருவரைக் கடித்தால் அதன் பாதிப்பு மோசமாக இருந்திருக்கும்.
நாயை வளர்த்த உரிமையாளர், பொது இடத்துக்கு நாயை அழைத்து வந்தது, முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்தது, பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தியது போன்றவை குற்றமாகும். அந்த நாயின் ஆக்ரோஷம் பற்றி உரிமையாளருக்கு தெரியும் என்று நீதிமன்றத்தில் அவரே தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்! பேரு நல்லா இருக்கு சாப்பாடு? பயணி வெளியிட்ட வீடியோ வைரலால் ரயில்வே அதிர்ச்சி
ஆதலால், ஐபிசி 337 பிரிவில் அவர் செய்தது குற்றமாகும். இது உள்நோக்கத்துடன் செய்யவில்லை என்றாலும் கவனக்குறைவாக நாய் உரிமையாளர் செயல்பட்டுள்ளார்.ஆதலால், நாய் உரிமையாளருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை வழங்க உத்தரவிடுகிறேன் “ எனத் தீர்ப்பளித்தார்