கர்நாட மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனத்தின் சார்பில் உருவாக்ககப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று தேசத்துக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
கர்நாட மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடட் நிறுவனத்தின் சார்பில் உருவாக்ககப்பட்ட நாட்டின் மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று தேசத்துக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்த தொழிற்சாலைக்கு கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய நிலையில் இப்போது அவரே திறந்து வைக்க உள்ளார்.
இது தவிர “ இந்தியா எரிசக்தி வாரம் 2023” என்ற திட்டத்தையும் பெங்களூருவில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
புதிய வீட்டுக்குக் குடியேறும் பிரதமர் மோடி! சுரங்கப்பாதையுடன் நவீன பாதுகாப்பு வசதிகள்!
கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல்-மே மாதத்தில் நடக்க இருக்கும் நிலையில் 3வது முறையாக பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு வருகை புரிகிறார்
கடந்த மாதம் 12ம் தேதி இளைஞர் விழா, 19ம் தேதி கலாபுர்கியில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி 3வது முறையாக தும்கூரு பகுதிக்கு வந்துள்ளார்.
பெங்களூருவில் “ இந்தியா எரிசக்தி வாரம் 2023” என்ற சர்வதேச கண்காட்சியையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்கப்பட உள்ளது.
பாரம்பரியத் துறை தலைவர்கள், எரிசக்தித் துறை நிறுவனங்களின் தலைவர்கள், அரசுத்துறை பிரதிநிதிகள், ஆகியோரை ஒன்றாக இணைக்கும் நிகழ்ச்சியாக இதுஅமையும். இதன் மூலம் எரிசக்தி துறையில் ஏற்படும் மாற்றத்தினால் எதிர்கொள்ளும் சவால்கள், வாய்ப்புகள், ஆகியவற்றை விவாதிக்க முடியும்
இந்த நிகழ்ச்சியில் உலகளவில் இருந்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கல், 3ஆயிரம் பிரதிநிதிகள், 1000 அரங்குகள், 500 விளக்கக்கூட்டங்கள் மூலம் இந்தியாவின் எதிர்கால எரிசக்தி திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சர்வதேச எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் சிஇஓக்களுடன் பேச்சு நடத்த உள்ளார். எத்தனால் கலந்து பெட்ரோல் விற்கும் 84 சில்லறை விற்பனை நிலையங்களை 11 மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி முடித்துவிட்டு, பிற்பகலில் தும்கூரு மாவட்டத்துக்கு செல்கிறார். அங்கு எச்ஏஎல் நிறுவனம் சார்பில் நாட்டிலயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணிக்கிறார். இந்த தொழிற்சாலை மூலம் இலகுரக ஹெலிகாப்டர்கள் தயாரிக்க முடியும்.
இலகு ரக போர் ஹெலிகாப்டர், இந்திய பன்முக ஹெலிகாப்டர், சிவில் ஹெலிகாப்டர் ஆகியவற்றை எதிர்காலத்தில் இந்த தொழிற்சாலை மூலம் தயாரிக்க முடியும். இதன் மூலம்இந்தியாவின் ஹெலிகாப்டர் தேவையை உள்நாட்டிலேயே எதிர்காலத்தில் நிறைவேற்ற முடியும். ஹெலிகாப்டர் வடிவமைப்பு, மேம்பாடு, தயாரிப்பை இந்தியாவில் இனிவரும் காலங்களில் செய்ய முடியும்
சீனாவின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!
தேசிய தொழிற்துறை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தும்கூரு தொழிற்துறை நகரத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்த தொழில்நகரம் 8,484 ஏக்கரில் அமைய உள்ளது, 3 பிரிவுகளாகக் கட்டப்படஉள்ளது. சென்னை-பெங்களூரு தொழிற்துறை நகரின் ஒருபகுதியாக இது கட்டப்பட உள்ளது.
இது தவிர திப்தூர், சிக்கனயகனஹல்லியில் இரு ஜல்ஜீவன் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார்.