சீனாவின் 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் செயலிகளையும் அவசர நிலையில் தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
சீனாவின் 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் செயலிகளையும் அவசர நிலையில் தடை செய்யும் பணியை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல் கடன் செயலிகளில் மக்கள் பலர் சிக்கிக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: காலில் கட்டுடன் உதவி கேட்ட பெண் பயணியை இரக்கமில்லாமல் கீழே இறக்கிவிட்டுச் சென்ற விமானம்!
இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் அவர்கள் தற்கொலை செய்துக்கொள்வதையே தீர்வாக எண்ணுகின்றனர். காரணம் அவர்கள் வாங்கும் தொகையை விட பல மடங்கு அதிக வட்டியுடன் பணத்தை கட்ட வேண்டும் என்றும் தவறினால் அவர்கள் பல்வேறு வகைகளில் மிரட்டப்படுவதாலும் செய்வதறியாது மக்கள் தற்கொலை செய்துக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!
இதை அடுத்து ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கடன் செயலிகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நாடு முழுவதும் சீனாவின் 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் செயலிகளையும் தடை செய்யும் பணியை மத்திய அரசு அவசர நிலையில் தொடங்கியுள்ளது.