மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.
மத்திய அரசு அதன் கீழ் பணிபுரியும் ஒரு கோடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதனை 42 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த அகவிலைப்படி உயர் அமல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கீழ் பணிபுரியும் 47.68 லட்சம் ஊழியர்களும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.
Supreme Court: உலகிலேயே பிசியானது இந்திய உச்ச நீதிமன்றம்தான்: சிங்கப்பூர் நீதிபதி பாராட்டு
இதுகுறித்து அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா கூறுகையில், “சென்ற டிசம்பர் 2022ல் அகவிலைப்படியை 4.23 சதவீதம் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அரசு 4 சதவீதம் வழங்க முடிவ செய்துள்ளதாகத் தெரிகிறது. எனவே விரைவில் அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது பற்றி அறிவிப்பு வெளியாகும்” என்று கூறினார்.
இதற்கு முன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அது 2002ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. சென்ற ஆண்டில் மட்டும் மூன்று முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டது நினைவூட்டத்தக்கது.