American Airlines: காலில் கட்டுடன் உதவி கேட்ட பெண் பயணியை இரக்கமில்லாமல் கீழே இறக்கிவிட்டுச் சென்ற விமானம்!

By SG BalanFirst Published Feb 5, 2023, 6:20 PM IST
Highlights

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டதால் விமானத்தில் இருந்தே இறக்கிவிடப்பட்டு இருக்கிறார்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 293 என்ற கொண்ட விமானம் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டது. அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் விமானப் பெண்ணிடம் உதவி கோரியுள்ளார். விமானப் பணிப்பெண் அவருக்கு உதவ மறுத்ததுடன், விமானத்தில் இருந்தும் இறக்கிவிட்டுவிட்டார்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மீனாட்சி சென்குப்தா டெல்லி காவல்துறையிலும் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திலும் புகார் அளித்துள்ளார். அதில் புற்றுநோயாளியான தான் கால்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதாகவும், பலவீனமான கால்களுடன் இருந்த தனக்கு உதவ மறுத்த விமானப் பணிப்பெண் மிகவும் கடுமையாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“டெல்லி விமான நிலையத்தில் இருந்த பணியாளர்கள் அனைவரும் விமானத்தில் ஏறுவதற்குத் தேவையான உதவிகளைச் செய்தனர். விமானத்தில் ஏறியதும் என்னிடம் இருந்த கைப்பையை இருக்கைக்கு மேல் உள்ள கேபினில் வைக்க உதவுமாறு விமானப் பணிப்பெண்ணிடம் வேண்டினேன். அவர் அது என் வேலை இல்லை என்று கூறி மறுத்ததுடன் மிகவும் கடுமையாக பேசினார்” என்று புகார் அளித்த மீனாட்சி சென்குப்தா கூறுகிறார்.

Dearness Allowance Hike: ஒரு கோடி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு!

“புற்றுநோயாளியான நான் சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். என் கால்களில் கட்டுபோட்டிருந்தது விமானத்தில் இருந்த எல்லாருக்கும் தெரிந்திருக்கும். என்னிடம் இருந்த ஹேண்ட் பேக் சுமார் 5 கிலோ எடை கொண்டது. அதை தலைக்கு மேல் இருந்த கேபினில் வைக்க முடியாததால்தான் பணிப்பெண்ணிடம் உதவி கேட்டேன்.” என்று கூறும் அவர் மற்ற விமானப் பணியாளர்களும்கூட எனக்கு உதவ முன்வரவில்லை என்று தெரிவிக்கிறார்.

இறுதியில் விமானம் புறப்பட இருந்த நேரத்தில் மீனாட்சி சென்குப்தா விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரியுள்ளது.

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதுபற்றி வெளியிட்டுள்ள பதிலில், பயணியைத் தொடர்புகொண்டு அவர் விமானத்தில் பயணக் கட்டணத்தை திருப்பி அளித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறது. மேலும், விமானப் பணியாளர்களின் அறிவுறுத்தல்படி நடந்துகொள்ளவில்லை என்பதால்தான் அவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார் என்றும் கூறியிருக்கிறது.

Supreme Court: உலகிலேயே பிசியானது இந்திய உச்ச நீதிமன்றம்தான்: சிங்கப்பூர் நீதிபதி பாராட்டு

click me!