ஒரே ஒரு சிகரெட்... 18 பேருக்கு பரவிய கொரோனா.!

Published : May 03, 2021, 05:57 PM IST
ஒரே ஒரு சிகரெட்... 18 பேருக்கு பரவிய கொரோனா.!

சுருக்கம்

ஒரு சிகரெட்டால் 18 பேருக்கு கொரோனா பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவில் ஒரு சிகரெட்டால் 18 பேருக்கு கொரோனா பரவியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று பரவியது. இவர்களுக்கு யார் மூலமாக பரவியது என அரசு அதிகாரிகள் அந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஊழியர்கள் ஆகியோரை விசாரித்தனர். அப்போது நிறுவனத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் மேனேஜரால்தான் கொரோனா தொற்று பரவியது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அந்த மார்க்கெட்டிங் மேனேஜரை தொடர்பு கொண்டதில் சில நாட்களுக்கு முன் டீக்கடையில் டீ குடிக்க சென்ற போது, அங்கு தெரிந்தவர் ஒருவர் அடிக்கடி லேசாக இருமியுள்ளார். அவரிடமிருந்து அவர் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை வாங்கி, தன்னிடம் இருந்த சிகரெட்டை பற்ற வைத்துள்ளார் மார்க்கெட்டிங் மேனேஜர். அப்போது அவருக்கு கொரோனா தொற்றி இருக்கலாம் என்று கூறினார். ஒரு சிகரெட்டால் 18 பேருக்கு கொரோனா பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஒரே நேரத்துல ரெண்டு குறி! 2025 கடைசி நாளில் பிரளய் ஏவுகணையை ஏவி அதிரடி காட்டிய இந்தியா!
குடியரசு தின விழாவில் ராஜபாளையம் நாய்! முதல் முறையாக ராணுவத்தின் கால்நடை அணிவகுப்பு!