குழுவில் இந்துக்கள் மட்டுமே இடம்பெறவேண்டும்... கேரள கம்யூனிஸ்ட்டுக்கு சம்பட்டி அடி கொடுத்த உச்சநீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jul 14, 2020, 11:29 AM IST
Highlights

பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். 

திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மீது அந்த குடும்பத்திற்கு உரிமை உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், இந்த குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும் என கண்டிப்புடன் கூறியுள்ளது.

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ள ரகசியஅறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் வெளி உலகுக்கு தெரியவந்தது. இந்த கோயிலை திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர். திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள சொத்துக்கள், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும். கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும்' என, சுந்தரராஜன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என 2011-ல் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. 

தீர்ப்பை எதிர்த்து, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தது. அதேநேரம், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம். குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் இந்துக்களாக இருக்க வேண்டும். கருவூலத்தை திறப்பது தொடர்பாக குழுவே முடிவு செய்யும் என தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளது. 

ஏற்கனவே ஐயப்பன் கோவிலில் கேரள அரசு நடந்து கொண்ட விதம் மற்றும் ஆளும் அரசாங்கத்தின் கொள்கை ஆகியவை இந்து மதத்திற்கு எதிராக இருப்பதால் இந்த முடிவை நீதிமன்றம் எடுத்ததாக கூறப்படுகிறது. பத்மநாபசுவாமி தங்க நகைகள், சொத்துக்களை அரசு கையகப்படுத்தி நிதி திரட்ட நினைத்த நிலையில் கேரள கம்யூனிஸ்ட்  கட்சிக்கு நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது. 

click me!