உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது... கடவுள் ராமர் நேபாளி... புதிய சர்ச்சையில் நேபாள பிரதமர் சர்மா ஒலி!!

By Asianet TamilFirst Published Jul 14, 2020, 7:40 AM IST
Highlights

 “கடவுள் ராமர் ஒரு நேபாளி. அவர் இந்தியரே அல்ல. உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது.” என்று கூறியதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் அதிர்வலைகளை அதிகரித்துள்ளது.

கடவுள் ராமர் இந்தியர் அல்ல; அவர் ஒரு நேபாளி என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த நேபாளம், அண்மைக் காலமாக முறுக்கிக்கொண்டு நிற்கிறது. இந்தியாவுக்கு சொந்தமான இடங்களை தங்களுக்கு சொந்தம் என்று கூறி, நேபாள நாட்டின் வரைப்படத்தை திருத்தியது. அதற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அனுமதி பெறப்பட்டது. இந்தியா தனது ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்வதாக அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி புகார் கூறினார். சில தினங்களுக்கு முன்பு இந்திய தொலைக்காட்சிகளுக்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் கடவுள் ராமர் ஒரு நேபாளி என்று கூறி அடுத்த சர்ச்சையை நேபாள பிரதமர் சர்மா ஒலி தொடங்கிவைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கடவுள் ராமர் ஒரு நேபாளி. அவர் இந்தியரே அல்ல. உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது.” என்று கூறியதாக நேபாள ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது இந்தியாவில் அதிர்வலைகளை அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்திய - நேபாள உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், சர்மா ஒலியின் இந்தப் பேச்சு புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

click me!