சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்கக் கூடாது.. ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செக்..

Published : May 12, 2023, 05:23 PM IST
சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்கக் கூடாது..  ஆன்லைன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு செக்..

சுருக்கம்

சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை ஆன்லைனில் விற்பனை செய்யக்கூடாது என்று அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் விற்பனை தொடர்பான விவகாரம் தொடர்பாக, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் நுகர்வோர் விவகாரத் துறைக்கு கடிதம் அனுப்பியது. தவறான விற்பனையாளர்கள் / ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் ஒரு ஆலோசனையை வழங்கவும் அந்த கடிதத்தில் வலுயுறுத்தி இருந்தது.

மத்திய மோட்டார் வாகன விதிகளின் படி, சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குகிறது. இருப்பினும், சீட் பெல்ட் அணியாதபோது அலாரம் பீப்பை நிறுத்துவதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்யும் இதுபோன்ற கிளிப்களை ஆன்லைன் விற்பனை செய்வது நுகர்வோரின் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தாக முடியும் என்று குறிப்பிட்டிருந்தது.

மேலும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களைப் பயன்படுத்துவது, மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளில் க்ளெய்ம் தொகையை பெறுவதற்கு நுகர்வோருக்கு ஒரு தடையாக இருக்கலாம். மறுபுறம், சீட் பெல்ட் பாதுகாப்பு கவசமாகவும் செயல்படுகிறது என்றும் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிங்க : ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதி உள்ளிட்ட 68 பேருக்கு பதவி உயர்வு நிறுத்தி வைப்பு..

இதை தொடர்ந்து நுகர்வோர் விவகாரத் துறை கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களின் விற்பனை சிக்கலை கண்டறிந்தது. மேலும் இந்த கிளிப்புகள் பல ஆன்லைன் விற்பனை தளங்களில் விற்கப்படுவதைக் கண்டறிந்தது. இது நுகர்வோரின் மதிப்புமிக்க உயிருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் சில ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் கிளிப்களை பாட்டில் ஓப்பனர்கள் அல்லது சிகரெட் லைட்டர் போன்றவற்றின் கீழ் மறைத்து வைத்து விற்பனை செய்வதும் விசாரணையின் போது கண்டறியப்பட்டது.

 

இந்நிலையில் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்களை விற்பனை செய்வதற்கான முதல் 5 ஆன்லைன் நிறுவனங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) உத்தரவு பிறப்பித்துள்ளது.  நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறும் வகையில் அமைந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, Amazon, Flipkart, Snapdeal, Shopclues மற்றும் Meesho, ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் உரிமைகள் மீறல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக உத்தரவுகளை பிறப்பித்தது. 

மேலும் பயணிகளின் பாதுகாப்பை சமரசம் செய்யும் அனைத்து கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் கிளிப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு ஆன்லைன் விற்பனை தளங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற தயாரிப்புகளின் தவறான விற்பனையாளர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. 

மேலும் நுகர்வோரின் மதிப்புமிக்க உயிரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவும் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு நுகர்வோர் விவகாரத்துறை கடிதம் எழுதியுள்ளது.

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில், சீட் பெல்ட் அணியாததால் சாலை விபத்துகளில் 16,000 பேர் இறந்துள்ளனர், அவர்களில் 8,438 ஓட்டுநர்கள் மற்றும் மீதமுள்ள 7,959 பேர் பயணிகள். மேலும், ஏறத்தாழ 39,231 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் 16,416 ஓட்டுநர்கள் மற்றும் 22,818 பயணிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : mPassport Seva App: இனி வீட்டில் இருந்து புதிய பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கலாம்.. எப்படி தெரியுமா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!