கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை... மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி!!

By Narendran SFirst Published Jul 18, 2022, 6:02 PM IST
Highlights

கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவில் ஏற்கனவே ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தற்போது 50க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதையும் படிங்க: கேரளாவை தொடர்ந்து ஆந்திராவிலும் குரங்கு அம்மை... சவுதி அரேபியாவில் இருந்து வந்த குழந்தைக்கு அறிகுறி!!

இந்த நிலையில் இந்தியா, சர்வதேச நாடுகளிலிருந்து வருபவர்களை விமான நிலையம், துரைமுகம் நாட்டில் எல்லைகளில் தடுத்து நிறுத்தி பரிசோதித்து வருகிறது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவுக்கு வந்த நபரை திருவனந்தபுரம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அவருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருந்ததை அடுத்து, அவரது ரத்தமாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பரிசோதனை முடிவில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவருடன் தொடர்பில் இருந்துவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழகம் வரும் செஸ் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை கட்டாயம்

இந்த நிலையில், கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உறுதி செய்யபப்ட்டுள்ளது. கேரளாவின் கன்னூர் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் சமீபத்தில் துபாய் நாட்டில் இருந்து கேரளாவிற்கு திரும்பியுள்ளார். அவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு 2 ஆக அதிகரித்துள்ளது.

click me!