காங்கிரஸ் எம்.பி.க்கள், அக்னிபாத் திட்டம், பணவீக்கம் உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவை இன்றுநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காங்கிரஸ் எம்.பி.க்கள், அக்னிபாத் திட்டம், பணவீக்கம் உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து கேள்வி எழுப்பி, அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, மாநிலங்களவை இன்றுநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவையில் இன்று முதல்நாளில் புதிதாக அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பலர் பதவிஏற்றுக்கொண்டனர்.
இலங்கை மக்கள் நிம்மதிபெருமூச்சு, மகிழ்ச்சி: கடந்த 6 மாதத்தில் முதல்முறையாக அறிவிப்பு
அதன்பின், மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஐக்கிய அரபு அமீரக முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயத் அல் நயான், கென்ய முன்னாள் அதிபர் மாய் கிபாகி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த முன்னாள்எம்.பி.க்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன்பின் காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் ஹீடா 267 விதியின் கீழ், நோட்டீஸ் அளித்து, அக்னிபாத் திட்டம் குறித்து விவாதிக்கக் கோரினார். இந்த திட்டம் பற்றி நாடுமுழுவதும் அமல்படுத்துவதற்கு முன் எந்தவிதமான ஆலோசனையும், கருத்துக் கேட்கும் இல்லாமல், தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால், அக்னிபாத் திட்டம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் எனக் கோரினார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்.பி. சக்திசின்கோகில், ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும், அக்னிபாத் திட்டத்தை உடனடியாக வாபஸ்பெற வேண்டும். நாட்டுக்கு உகந்த திட்டம் இல்லை. இந்தத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் நாடுமுழுவதும் போராடினர் எனத் தெரிவித்தார்
மத்திய பிரதேசத்தில், நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பேர் பலி
மக்களவையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் ,ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளி்த்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1053 எட்டிவிட்டது, 2014ம் ஆண்டுஇருந்த விலைக்கு இணையாக அரசு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும். மானியம் வழங்க வேண்டும். ஓர் ஆண்டுக்காவதே பெட்ரோலியப் பொருட்கள் விலையை நிலைப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
மாநிலங்களவையில், 267 விதியின் கீழ் அலுவல்களை ஒத்திவைத்து, பணவீக்க உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. கேசி. வேணுகோபால் தெரிவித்தார்
அவர் அளித்த நோட்டீஸில் “ 267 விதியின் கீழ் அவையின் அனைத்து அலுவல்களையும்ஒத்தி வைத்து, நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால், சாமானிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். சமீபத்திய ஜிஎஸ்டி வரி உயர்வால் பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு அவையின் மையப்பகுதிக்கு வந்து கூச்சலிட்டனர். காங்கிரஸ் எம்.பி.க்களை இடத்தில் அமரக்கூறி, அவைத்தலைவர் வெங்கையாநாயுடுகேட்டுக்கொண்டார். ஆனால், எம்.பி.க்கள் தொடர்ந்து கூச்சலிடவே, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்து அறிவித்தார்.