புதுவையில் ஊதிய பாக்கியை வழங்கக் கோரி ஒற்றை காலில் நின்று போராட்டம்

By Dinesh TG  |  First Published Oct 7, 2022, 4:58 PM IST

புதுச்சேரி அரசு குடிசைமாற்று வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10 மாத நிலுவை ஊதியத்தை வழங்க கோரி 22-வது நாளான இன்று  ஓற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 


புதுச்சேரி மாநிலம் பெரியார் நகரில் உள்ள அரசு குடிசைமாற்று வாரியத்தில் 160 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு ஏழை எளிய மக்கள் வீடு கட்டுவதற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதமாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

bharat jodo yatra: ராகுல்ஜி! முதலில் 'காங்கிரஸ் ஜோடோ யாத்திரை' நடத்துங்கள்: உ.பி. பாஜக தலைவர் கிண்டல்

Tap to resize

Latest Videos

இந்நிலையில் ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள 10 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மேலும் இங்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து அலுவலகம் வாயிலில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

தற்போது வரை அரசு சார்பில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் 22வது நாளான இன்று நிலுவை ஊதியம் வழங்கக் கோரி அலுவலக வாயில் முன்பு ஊழியர்கள் அனைவரும் ஒற்றை காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். 

பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது

உடனடியாக நிலுவை ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

click me!