காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடத்துவதற்குப் பதிலாக காங்கிரஸ் ஒற்றுமை நடைபயணம் நடத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணம்(பாரத் ஜோடோ யாத்ரா) நடத்துவதற்குப் பதிலாக காங்கிரஸ் ஒற்றுமை நடைபயணம் நடத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி கிண்டல் செய்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ நடைபயணத்தை கடந்த மாதம் 7ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து தொடங்கினார். காஷ்மீர் வரை செல்லும் இந்த நடைபயணத்தில் ராகுல் காந்தி 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து 3,500கி.மீ தொலைவுக்கும் அதிகமாக நடக்க உள்ளார்.
தமிழகத்தைக் கடந்து, கேரள மாநிலத்தில் 18 நாட்களுக்கும் மேலாகச் சென்று தற்போது ராகுல் காந்தி நடைபயணம் கர்நாடக மாநிலத்துக்குள் சென்றுள்ளது.
உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி யார்? யுயு லலித்தின் பரிந்துரை கேட்கிறது மத்திய அரசு
இந்நிலையில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையை கிண்டல் செய்யும் விதமாக உத்தரப்பிரதேச பாஜக தலைவர் பூபேந்திர சிங் சவுத்ரி பேசியுள்ளார்.
பலியா நகரில் பூபேந்திர சவுத்ரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி, பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், கராச்சி, இஸ்லாமாபாத்தில் இருந்து தொடங்கியிருக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாட்டில் பிரிவினை நடந்தது. அதன்பின் இதுவரை நாட்டில் பிரிவினை இல்லை.
சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக புதிய ‘ஆப்ஸ்’: யுபிஎஸ்சி அறிமுகம்
பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கியபின், கட்சிக்குள் ஏராளமான குழப்பங்கள் வருகின்றன. ஆதலால் ராகுல் காந்தி முதலில் காங்கிரஸ் ஜோடோ யாத்திரையை தொடங்க வேண்டும். ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நிலவும் காங்கிரஸ் உட்கட்சி குழப்பத்தை நீக்கி, காங்கிரஸில் ஒற்றுமையை ஏற்படுத்தலாம்” எனத் தெரிவித்துள்ளார்.