upsc online App: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக புதிய ‘ஆப்ஸ்’: யுபிஎஸ்சி அறிமுகம்

By Pothy RajFirst Published Oct 7, 2022, 4:17 PM IST
Highlights

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகுவோருக்கு உதவும் வகையில், ஆன்ட்ராய்ட் மொபைல் செயலியை யுபிஎஸ்சி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகுவோருக்கு உதவும் வகையில், ஆன்ட்ராய்ட் மொபைல் செயலியை யுபிஎஸ்சி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியில், தேர்வுத்தேதிகள், காலிப்பணியிடம், தேர்வு முடிவுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைத் அறிந்து கொள்ள முடியும். இந்த செயலி, கூகுள் ப்ளே ஸ்டைரில் இன்றுமுதல் கிடைக்கும். 
இது குறித்து யுபிஎஸ்சி வெளியிட்ட அறிக்கையில் “ யுபிஎஸ்சி ஆன்ட்ராய்டு மொபைல் செயலியை யுபிஎஸ்சி ஆணையம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, கூகுள் ப்ளேஸ்டோரில் கிடைக்கும்.

உச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி யார்? யுயு லலித்தின் பரிந்துரை கேட்கிறது மத்திய அரசு

 அனைத்து விதமான தேர்வுகள்,தேதிகள், விண்ணப்ப விவரம், காலிப்பணியிடம் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அறிய முடியும். ஆனால், மொபைல் செயலி மூலம் தேர்வர்கள், விண்ணப்பங்களை நிரப்ப முடியாது. இந்த செயலியை, https://play.google.com/store/apps/details?id=com.upsc.upsc. எனும் லிங்கை பயன்படுத்தி பதவிறக்கம் செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளது

யுபிஎஸ்சி ஆண்டுதோறும் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளுக்குத் தேர்வு நடத்துகிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு எழுதுகிறார்கள். சிவில் சர்வீஸ் தேர்வுகள் 3 கட்டங்களாக நடத்தப்படுகின்றன. 

எருமை மாடு மீது மோதிய மும்பை-காந்திநகர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்:

முதனிலைத் தேர்வு, பிரதானத் தேர்வு இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு மதிப்பெண் அடிப்படைியல் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணிக்கு சேர்க்கப்படுவார்கள்.

click me!