வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: இருப்பு பாதையில் எருமை மாடுகளை மேயவிட்ட உரிமையாளர் மீது வழக்கு

By Pothy RajFirst Published Oct 7, 2022, 2:27 PM IST
Highlights

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மோதிய விபத்தில், மாட்டின் உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மோதிய விபத்தில், மாட்டின் உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மும்பையிலிருந்து காந்திநகர் சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், அகமதாபாத் அருகே வத்வா மணிநகர் பகுதியில் ரயில் வந்தபோது, இருப்புப் பாதையில் நின்றிருந்த எருமை மாடுகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 எருமை மாடுகள் உயிரிழந்தன.  

 இந்த விபத்தில் ரயிலின் மூக்குப்பகுதி பலத்த சேதமடைந்தது. அதன்பின் மும்பையிலிருந்து ரயிலின் சேதமடைந்த முன்பகுதிக்கு பதிலாக வேறு ஒருபகுதி வரவழைக்கப்பட்டு  இன்று மாற்றப்பட்டு ரயில் இயக்கப்பட்டதாக மேற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை பலிகொண்ட மெய்டன் இருமல் மருந்து இந்தியாவில் விற்பனை இல்லை

இந்த விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்த எருமை மாடுகளை கவனக்குறைவாக இருப்புப்பாதையில் மேயவிட்ட உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கு ரயில்வேயின் செய்தித்தொடர்பாளர் ஜிதேந்திர குமார் ஜெயந்த் கூறுகையில் “ வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத உரிமையாளர்கள் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்” எனத் தெரிவித்தார்

ரயில்வே பாதுகாப்பு படையின் ஆய்வாளர் பிரதீப் ஷர்மா கூறுகையில் “ ரயில்வே பாதுகாப்புச் சட்டம் பிரிவு 17ன் கீழ் அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ரயில்வே பகுதிக்குள் அத்துமீறி நுழைதல், பொருட்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை எருமை மாடுகளின் உரிமையாளர்களை அடையாளம் காணவில்லை.அவர்களைத் தேடி வருகிறோம்”எ னத் தெரிவித்தார்

21 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்... சும்மா கெத்தா... மாஸா.. குஜராத் CM ஆக பதவியேற்ற மோடி.. புகைப்படம் வைரல்

 மேற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில் “ கால்நடைகள் மீது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயிலின் ஓட்டுநர் பகுதி, மூக்குப்பகுதி  ஆகியவைசேதமடைந்தன. ஆனால், ரயிலின் முக்கியமான பாகங்களுக்கு எந்தவிதசேதமும் இல்லை. 

மும்பை மத்திய ரயில் பராமரிப்பு மையத்திலிருந்து ரயிலின் முன்பகுதி வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூக்குப்பகுதி எப்போதுமே இருப்பில் வைக்கப்படும். அதனால் உடனடியாக மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது. 

 ரயிலின் மூக்குப் பகுதி பைபர் ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக் எனப்படும் எப்ஆர்பி் என்ற பொருளில் செய்யப்பட்டுள்ளது.ரயில் எந்தவிதமான தாமதத்துடன் செல்லவில்லை. விபத்து ஏற்பட்டாலும், உரிய நேரத்துக்கு காந்தி நகர் சென்றது. அங்கு ரயிலின் முன்பகுதி மாற்றப்பட்டு வழக்கமான சேவையில் இணைந்தது. 

எருமை மாடு மீது மோதிய மும்பை-காந்திநகர் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்:

பயணிகளுக்கு எந்தவிதமான அசவுகரியக் குறைவும் இன்றி,  இன்று வழக்கம்போல் காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் மேற்கு ரயில்வே விழிப்புடன் இருக்கும். ” எனத் தெரிவித்தார்

click me!