மும்பை-காந்திநகர் இடையே சமீபத்தில் இயக்கப்பட்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாட்டின் மீது விபத்துக்குள்ளானது. அதன்பின் ரயிலின் முன்பகுதியில் சேதமடைந்த பகுதிகள் மாற்றப்பட்டன என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மும்பை-காந்திநகர் இடையே சமீபத்தில் இயக்கப்பட்ட வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாட்டின் மீது விபத்துக்குள்ளானது. அதன்பின் ரயிலின் முன்பகுதியில் சேதமடைந்த பகுதிகள் மாற்றப்பட்டன என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த மாதம் குஜராத் பயணம் சென்று நவராத்தி விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது குஜராத்தின் காந்தி நகர் மற்றும் மும்பை இடையேயான வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி வைத்தார்.
பொருளாதாரத்தில் வலுவாக மீண்டு வரும் இந்தியா... உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் கருத்து!!
மும்பை-காந்தி நகர் இடையிலான தொலைவை வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் 5.30மணிநேரத்தில் கடந்து சாதனை படைத்தது. பல்வேறு நவீன வசதிகளான வை-பை, முழுவதும் ஏசி வசதி, பயணிகளுக்கு ஏராளமான வசதிகளுடன் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மும்பையிலிருந்து காந்திநகர் சென்ற வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில், அகமதாபாத் அருகே வந்தபோது, ரயில் இருப்புப்பாதையின் குறுக்கே சென்ற எருமைமாடுகள் மீது மோதியது. அகமதாபாத்தின் வத்வா மணிநகர் பகுதியில் ரயில் வந்தபோது, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ரயிலின் மூக்குப்பகுதி பலத்த சேதமடைந்தது. பின்னர் ரயிலின் சேதமடைந்த முன்பகுதி இன்று மாற்றப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
66 குழந்தைகளை பலிகொண்ட மெய்டன் இருமல் மருந்து இந்தியாவில் விற்பனை இல்லை
மேற்கு ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி சுமித் தாக்கூர் கூறுகையில் “ கால்நடைகள் மீது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் ரயிலின் ஓட்டுநர் பகுதி, மூக்குப்பகுதி ஆகியவைசேதமடைந்தன. ஆனால், ரயிலின் முக்கியமான பாகங்களுக்கு எந்தவிதசேதமும் இல்லை.
மும்பை மத்திய ரயில் பராமரிப்பு மையத்திலிருந்து ரயிலின் முன்பகுதி வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூக்குப்பகுதி எப்போதுமே இருப்பில் வைக்கப்படும். அதனால் உடனடியாக மும்பையிலிருந்து வரவழைக்கப்பட்டு மாற்றப்பட்டது.
ரயிலின் மூக்குப் பகுதி பைபர் ரீஇன்போர்ஸ்டு பிளாஸ்டிக் எனப்படும் எப்ஆர்பி் என்ற பொருளில் செய்யப்பட்டுள்ளது.ரயில் எந்தவிதமான தாமதத்துடன் செல்லவில்லை. விபத்து ஏற்பட்டாலும், உரிய நேரத்துக்கு காந்தி நகர் சென்றது. அங்கு ரயிலின் முன்பகுதி மாற்றப்பட்டு வழக்கமான சேவையில் இணைந்தது.
அதிர்ச்சி !! ராவணன் உருவபொம்மை சரியாக எரியாததால் நகராட்சி ஊழியர் சஸ்பெண்ட்... எங்கு தெரியுமா..?
பயணிகளுக்கு எந்தவிதமான அசவுகரியக் குறைவும் இன்றி, இன்று வழக்கம்போல் காந்திநகரில் இருந்து மும்பைக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வகையில் மேற்கு ரயில்வே விழிப்புடன் இருக்கும். ” எனத் தெரிவித்தார்