omicron india : ஒமைக்ரான் வைரஸை எதிர்க்க கோவிஷீல்ட் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செயல்பாடது, கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என ஐசிஎம்ஆர் அமைப்பின் வைரலாஜிப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒமைக்ரான் வைரஸை எதிர்க்க கோவிஷீல்ட் இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செயல்பாடது, கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என ஐசிஎம்ஆர் அமைப்பின் வைரலாஜிப் பிரிவு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி
undefined
ஒரு தனிநபர் 2 தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்தியபோதிலும்கூட, கொரோனாவின் 3 அலையிலும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டறிந்தபின் பூஸ்டர் தடுப்பூசியை அனைவரும் செலுத்த ஐசிஎம்ஆர் வேண்டுகோள் விடுத்துள்ளது.
புனேயில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “ டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் முதல் அலையில் கொரோனாவில் பாதிக்கப்பட்டார், இரு தடுப்பூசிகள் செலுத்தியபின்பும், டெல்டா வைரஸிலும், ஒமைக்ரான் தொற்றிலும் பாதிக்கப்பட்டார்.
நோய்எதிர்ப்புச்சக்தி ்அழிப்பு
எங்கள் ஆய்வில் தடுப்பூசி மூலமும், தொற்று பாதிப்பின் மூலமும் உடலில் உருவாகிய நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கும் தன்மை ஒமைக்ரானுக்கு உண்டு என்பதைக் கண்டறிந்தோம்.
ஆய்வில் 38வயது நிரம்பிய ஒருவர் முதல் அலையில் 2020ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பாதிக்கப்பட்டார், அப்போது அவருக்கு உடல்வலி, காய்ச்சல், வறட்டு இருமல் இருந்தது. ஆனால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏதும் இல்லை. கொரோனாவிலிருந்து குணமடைந்தபின் பல்வேறுவிதமான உடல்உபாதைகள் இருந்தன, குறிப்பாக உடல்சோர்வு, 3 மாதங்கள்வரை இருந்தது.
2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அதேநபருக்கு மீண்டும் உடல்வலி, தலைவலி ஏற்பட்டு, அவருக்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. 3 நாட்களில் சரியானது. 3-வது அலையில் 2022ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடுமையான தலைவலி, உடல்வலியால் அவதிப்பட்டு குணமடைந்தார். 2 மாதங்கள் இந்த உடல்உபாதைகளுடன் இருந்தார். இந்த 3 தொற்றால் பாதிக்கப்படுவதற்குஇடையே கோவிஷீல்ட் தடுப்பூசி 2 டோஸ்களையும் அந்த நபர் செலுத்தியிருந்தார்.
தடுப்பூசி செலுத்தியும் தொற்று
தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியபோதிலும்கூட கொரோனா அல்லது ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. 2021 ஜனவரி 31 ம்தேதி முதல் டோஸ் தடுப்பூசியும், மார்ச் 3ம் தேதி 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டும் அந்த நபர் 3 அலைகளிலும் பாதி்க்கப்பட்டுள்ளார்.
ஆதலால், 2 தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம். அது தொற்று ஏற்படுவதிலிருந்து காக்கும், தொற்று ஏற்பட்டாலும் லேசான அறிகுறிகளுடன் விரைவில் சரியாகும். தீவிரத்தன்மையை குறைக்கும்.
raghuram rajan news: சிறுபான்மையினருக்கு எதிரான இந்தியாவின் தோற்றம்: ரகுராம் ராஜன் எச்சரிக்கை
கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை, நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். ஆதலால், 3-வது டோஸ் அல்லது பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி ஒமைக்ரானுக்கு எதிராகவலுவாகப் போரிட முடியும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த அறிக்கையை இந்திய வைரலாஜி நிறுவன ஆய்வாளர்கள் ஜர்னல் ஆஃப் இன்பெக்ஸன் என்ற இதழலில் வெளியிட்டுள்ளனர்.