அன்று ஹிஜாப், இன்று பைபிள்.. கர்நாடகாவில் தொடர்ந்து வெடிக்கும் ‘மத சர்ச்சைகள் !’

By Raghupati RFirst Published Apr 25, 2022, 1:34 PM IST
Highlights

பெங்களூரில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம், கட்டாயம் பைபிள் எடுத்துவர வேண்டும் என்று மாணவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அமர்வு, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று தெரிவித்தனர்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த் நிலையில் இப்போது அங்கு புதிய  சர்ச்சை ஒன்று  கிளம்பி உள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் ரிச்சர்ட் நகரில் கிளாரன்ஸ் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், பயின்று வரும் மாணவ, மாணவியர் அனைவரும் கட்டாயம் பைபிள் கொண்டுவர வேண்டும் என பள்ளி நிர்வாகம் அதிரடியாக தெரிவித்துள்ளது. மாற்று மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இச்சூழலில், கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளை மாணவர்கள் மீது திணிக்கும் விதமாக பள்ளி நிர்வாகம் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் தான், பள்ளிகளில் பகவத்கீதையை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்த பேச்சு எழுந்து இருந்தது. பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குஜராத் மாநிலத்தில் 6-12 வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் பகவத் கீதையை சேர்க்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஓகே சொன்ன கே.சி.ஆர்.. ஹேப்பியான பிரசாந்த் கிஷோர்.! அப்போ காங்கிரஸ் கதி ‘அவ்ளோதானா’ ?

click me!