ராணுவ செலவீனங்கள்.. உலகின் டாப் 3 பட்டியலில் இந்தியா - எந்த இடம் தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Apr 25, 2022, 11:52 AM IST
Highlights

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும், சர்வதேச ராணுவ செலவீனங்கள் வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன.

உலகளவில் ராணுவத்திற்காக செலவிடப்படும் தொகை இதுவரை இல்லாத அளவிற்கு 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்து இருக்கிறது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. ராணுவத்திற்காக அதிக செலவிடும் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

"2021 ரியல்டெர்ம்களில் ஒப்பிடுகையில், சர்வதேச அளவில் ராணுவ செலவீனங்கள் 0.7 சதவீதம் அதிகரித்து 2 ஆயிரத்து 113 ஆயிரம் பில்லியன் டாலர்களாக அதிகரித்து இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் ராணுவத்திற்காக அதிக தொகையை செலவிட்ட நாடுகள் பட்டியலில், அமெரிக்கா, சீனா, இந்தியா, பிரிட்டன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருந்தன. இவை சர்வதேச ராணுவ செலவீனங்களில் 62 சதவீதம் ஆகும்," என ஸ்டாக்ஹோம் சார்ந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேகம் குறைவு:

"கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்ட நிலையிலும், சர்வதேச ராணுவ செலவீனங்கள் வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளன. விலை உயர்வு காரணமாக ரியல்-டெர்ம்களின் வளர்ச்சி வேகம் குறைந்தது. எனினும், ராணுவ செலவீனங்கள் 6.1 சதவீதம் வரை அதிகரித்து இருக்கிறது," என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் டெய்கோ லோப்ஸ் டி சில்வா தெரிவித்து இருக்கிறார். 

அதிக செலவீனங்கள்:

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலக்கட்டத்திற்கு பிந்தைய பொருளாதார வீழ்ச்சி நிலையில் இருந்து மெல்ல மீண்டு வர தொடங்கியதை அடுத்து ராணுவ செலவீனங்கள் 2.2 சதவீதமாக இருந்தது. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி அமெரிக்க ராணுவ செலவீனங்கள் 2021 ஆம் ஆண்டு 801 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2020 ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.4 சதவீதம் குறைவு ஆகும். 

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக சீனா 293 பில்லியன் டாலர்களை ராணுவத்திற்காக செலவிட்டது. இது 2020 ஆண்டுடன் ஒப்பிடும் போது 4.7 சதவீதம் அதிகம் ஆகும். இந்தியாவின் ராணுவ செலவீனங்கள் 76.6 பில்லியன் டாலர்களாக இருந்துள்ளது. இது 2020 ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.9 சதவீதம் அதிகம் ஆகும். 

click me!