
மே மாதத்தில் மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்களின் சேவை பாதிக்கப்படும் சூழல் நிலவி உள்ளது. ஏப்ரல் மாதம் இன்னும் சில நாட்களில் நிறைவடையுள்ள இருக்கும் நிலையில் மே மாதத்தில் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகள் இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமை, நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் மாநில விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் என பல விடுமுறை நாட்கள் உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது.
இதனால் வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்யும் பணிகளை முன்கூட்டியே கணக்கிட்டு செய்து கொள்ளலாம். இந்த நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை பட்டியலில் பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை என கணக்கிட்டு விடுமுறை நாட்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த வகையில் வரும் மே மாதத்தில் மே 1ம் தேதி (உழைப்பாளர் தினம்/ஞாயிறு), மே 2ம் தேதி (மகரிஷி பரசுராம் ஜெயந்தி), மே 3ம் தேதி (ரம்ஜான்)
மே 4ம் தேதி (இதுல் பித்ர் – தெலுங்கானாவில் விடுமுறை), மே 8ம் தேதி (ஞாயிறு), மே 9ம் தேதி (குரு ரவீந்திரநாத் ஜெயந்தி மேற்கு வங்கம் மற்றும் திரிபுரா), மே 13ம் தேதி (இதுல் பித்ர் – தேசிய விடுமுறை), மே 14ம் தேதி (இரண்டாம் சனிக் கிழமை), மே 15ம் தேதி (ஞாயிறு), மே 16ம் தேதி (புத்த பூர்ணிமா சிக்கிம் மற்ற சில மாநிலங்கள்), மே 22ம் தேதி (ஞாயிறு), மே 24ம் தேதி (காசி நஸ்ருல் இஸ்லாம் பிறந்த நாள் – சிக்கிம்), மே 28ம் தேதி (நான்காம் சனிக்கிழமை), மே 29ம் தேதி (ஞாயிறு) உள்ளிட்ட நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை என கூறப்படுகிறது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்களது வேலைகளை முன்னதாக முடித்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.