பரபரப்பு.. ! நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா.. ஒரு நாள் பாதிப்பு மீண்டும் உயர்வு.. கட்டுப்பாடுகள் அமலாகுமா?

By Thanalakshmi VFirst Published Apr 24, 2022, 10:52 AM IST
Highlights

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,593பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,527 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2,593 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2,593பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 2,527 பேருக்கு தொற்று பதிவான நிலையில், இன்று 2,593 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,593 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,30,57,545 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 1,755 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்று 1,656 பேர் குணமடைந்த நிலயில் இன்று 1,755 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,19,479 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் குணமடைந்தோர் விகிதம் 98.75% ஆக உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பினால் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 15,873 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04 % ஆக அதிகரித்துள்ளது.

தினசரி தொற்று பரவல் விகிதம் 0.59% ஆகவும் வாராந்திர தொற்று பரவல் விகிதம் 0.54% ஆகவும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவிற்கு 33 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 44 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பினால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,193 ஆக உள்ளது. நாட்டில்  கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் விகிதம் 1.21 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 187.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,05,374 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் இதுவரை 83.47 கோடி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,36,532 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

click me!