ஒமைக்ரானால் தடுப்பூசி போட்டவர்கள் அதிக பாதிப்பு.. ஆய்வில் தகவல்..விவரித்த மத்திய சுகாதாரத்துறை

Published : Dec 25, 2021, 08:03 PM IST
ஒமைக்ரானால் தடுப்பூசி போட்டவர்கள் அதிக பாதிப்பு.. ஆய்வில் தகவல்..விவரித்த மத்திய சுகாதாரத்துறை

சுருக்கம்

ஒமைக்ரானால் பாதிகப்பட்ட 91சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 91 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளைப் செலுத்தியுள்ளதாகவும், மூன்று பேர் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் ஏழு சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஒமைக்ரான் பாதிப்புகள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களிடம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆய்வு செய்யப்பட்ட 183 ஒமைக்ரான் தொற்று பாதிக்கப்பட்டவர்களில், 87 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஏழு பேர் தடுப்பூசி செலுத்தவில்லை என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், 70 சதவீத ஒமைக்ரான் பாதிப்புகள் அறிகுறியற்றவை என்றும், 30 சதவீத தொற்றாளர்களிடம் அறிகுறிகள் இருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 183 ஓமிக்ரான் பாதிப்புகளில், 87 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர். டெல்லியில் இரண்டு பேரும், மும்பையில் ஒருவரும் பூஸ்டர் டோஸ்களை செலுத்தியுள்ளனர். பெரும்பான்மையாக வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்களிடம் தான் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருக்கிறது. அவர்களிடம் தொடர்புடைய சிலரிடம் தொற்று பரவியிருக்கிறது என்றும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார்.

இதனைதொடர்ந்து உலகம் தற்போது 4 வது கொரோனா அலையை எதிர்கொண்டுள்ளது. ஐரோப்பா நாடுகளுடன் ஒப்பிடுகையில் வட அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் அன்றாடம் சுமார் 7000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. கடந்த 4 வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 10,000க்கும் குறைவாகவே பதிவாகி உள்ளது. இந்தியாவில் முதல் அலை செப்டம்பர் 2020லும், இரண்டாவது அலை மே 2021லும் ஏற்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று விகிதம் குறைந்துள்ளதாக அவர் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

இளம் வயதினரிடையே திடீர் மரணம் அதிகரிப்பு.. கோவிட்-19 தடுப்பூசி தான் காரணமா?
ஒரே ஃபிரேம்ல ரெண்டு GOAT.. சச்சின் கையால் 'நம்பர் 10' ஜெர்சி வாங்கிய மெஸ்ஸி!