அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு... தமிழகம் உள்பட 10 மாநிலங்களுக்கு விரைகிறது மத்திய குழுக்கள்!!

By Narendran SFirst Published Dec 25, 2021, 7:28 PM IST
Highlights

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழுக்கள்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழுக்கள்  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 26 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ், தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. குறிப்பாக பிரிட்டன், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் வேகம் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகள் மீண்டும் சர்வதேசப் பயணத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்திலேயே கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

இருந்த போதிலும் கடந்த 2 ஆம் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான், தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரானால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தமிழகத்தில் தற்போது 39 பேருக்கு ஒமைக்ரானுக்கு முந்தைய அறிகுறிகள் தென்படுகின்றன. ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட 34 பேரில் 12 பேர் குணமடைந்துவிட்டனர். இதன் மூலம், தமிழகத்தில் ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7ல் இருந்து 12 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் விரைந்துள்ளன. தமிழகத்தில் இதுவரை 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகமாக உள்ள கேரளம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிஸோரம், கா்நாடகம், பிகாா், உத்தர பிரதேசம், ஜாா்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய சுகாதாரத் துறையின் உயர்மட்டக் குழுக்கள்  விரைந்துள்ளது. இந்த குழு, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உதவிகளை மாநில, மாவட்ட நிா்வாகங்களுக்கு அக்குழு வழங்கும். 3 முதல் 5 நாள்கள் தங்கியிருந்து மாநிலங்களுக்கான ஆலோசனைகளை வழங்குவா். மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்துவதற்கான தேவையான ஆலோசனைகளை வழங்குவது, கொரோனா பரிசோதனை மாதிரிகளை மரபணு ஆய்வுக்கு அனுப்புவது, மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்துவா் என்று கூறப்படுகிறது.

click me!