செல்லாத 1000 , 500 ரூபாய் நோட்டுகள்.... ரிசர்வ் வங்கி புதிய திட்டம்

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 10:38 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
செல்லாத 1000 , 500 ரூபாய் நோட்டுகள்.... ரிசர்வ் வங்கி புதிய திட்டம்

சுருக்கம்

பிரதமர் மோடி ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பின் மூலம், பெறப்பட்ட 1500 கோடி எண்ணிக்கையிலான ரூ.1000, ரூ.500 நோட்டுகளை அழிக்க ரிசர்வ் வங்கிக்கு ஒரு ஆண்டு ஆகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்காக ஜப்பான் அல்லது ஜெர்மனியில் இருந்து பிரத்யேக இயந்திரங்களை இறக்குமதி செய்து, ரூபாய் நோட்டுகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி அழிக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

மோடி அறிவிப்பு

நாட்டில் கருப்பு பணம், கள்ள நோட்டுகளை அழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கிகள், தபால் நிலையங்கள், மூலம் செல்லாத ரூபாய்களை ரிசர்வ் வங்கி பெற்று, புதிய ரூ.500,ரூ.2000 நோட்டுகளை மக்களுக்கு வழங்கி வருகிறது.

3 மையங்கள்

வங்கிகளிடமிருந்து பெறப்படும் செல்லாத ரூபாய் நோட்டுகளை வரிசைப்படுத்தவும், ஆய்வு செய்யவும், அழிக்கவும் மும்பை, பெலாப்பூர் மற்றும் நாக்பூரில் 3 மையங்களை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

70 சதவீதம்

இது குறித்து ரிசர்வ் வங்கியின் கரன்சி மேலாண்மை துறையில் பணியாற்றும் பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “  மும்பை தவிர்த்து, மற்ற இடங்களுக்கும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் மூட்டைகள் பழைய நோட்டுகள் அழிப்பதற்காக அனுப்பப்படும்.

நாட்டில்  புழக்கத்தில் இருக்கும் குறைந்தமதிப்புடைய ரூபாய்களில் கிழிந்த, சேதமடைந்தவற்றை அழிக்கும் பணியில் ரிசர்வ் வங்கியின் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்தபணிகள் இப்போது நிறுத்தப்பட்டு, ரூ.500, ரூ1000 நோட்டுகள் அழிக்கப்படும்.

மீண்டும் இந்த நோட்டுக்கள் புழக்கத்துக்கு வரும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. 70 சதவீத நோட்டுகள் அழிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கிறோம்.  ஏறக்குறைய 1500 கோடி எண்ணிக்கையிலான நோட்டுகள் அழிக்கப்படலாம்'' என்றார்.

1500 கோடி

கடந்த 2015-16ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, நாட்டில் 62.5 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 280 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகள் கடந்த ஆண்டு அழிக்கப்பட்டது.2016ம் ஆண்டு மார்ச், நாட்டில் ஆயிரம் ரூபாய் 632.6 கோடி எண்ணிக்கையிலும், 500 ரூபாய் 1570.7 கோடி எண்ணிக்கையிலும் உள்ளன. இவை அணைத்தும் அழிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எந்திரம் இறக்குமதி

இதற்காக ரிசர்வ் வங்கி சார்பில் நாடுமுழுவதும் 19 இடங்களில் ரூபாய்களை வெட்டி அழிக்கும் இயந்திரகள், 40 ஆய்வு செய்யும் எந்திரங்களை நிறுவ இருக்கிறது. இந்த ரூபாய்நோட்டுகளை அழிக்கும் எந்திரங்கள் ஜப்பான் அல்லது ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.இந்த எந்திரம் மணிக்கு 2.50 லட்சம் எண்ணிக்கையிலான நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அழிக்கும்.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!