டோல்கேட் கட்டணம் மத்திய அரசு புதிய அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 10:08 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
டோல்கேட் கட்டணம் மத்திய அரசு புதிய அறிவிப்பு

சுருக்கம்

நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை(2-ந்தேதி) நள்ளிரவு முதல் டோல்கேட் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் செலுத்த பழைய ரூ500 நோட்டுகளை வரும் 15-ந்தேதி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.1000, ரூ500 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி அறிவித்தார். அதன்பின், தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக டோல்கேட்கட்டணத்தை டிசம்பர் 1-ந்தேதி வரை ரத்து செய்து மத்தியஅரசு உத்தரவு பிறப்பித்தது.

ஏற்கனவே கட்டணம் வசூலிக்க கடந்த 14, 18, 24-ந்தேதி வரை தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அந்த காலக்கெடு டிசம்பர் 1ந் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நாளை நள்ளிரவுடன் அந்த தடை முடிந்து மீண்டும் கட்டணம் வசூலிக்கப்பட இருக்கிறது.

தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் வாகனங்கள் கட்டணம் செலுத்த சில்லறை இல்லாமல் சிரமப்படக்கூடாது என்பதற்காக, போதுமான அளவில் டோல்கேட்களில் ஸ்வைப் மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக ஸ்ேடட் பேங் ஆப் இந்தியா, உள்ளிட்ட பிற வங்கிகள் உதவியுடன் ஸ்வைப் மெஷின்கள் வழங்கப்பட்டுள்ளன.மேலும்,  கட்டணம் செலுத்த பழைய ரூ500 நோட்டுகளை வரும் 15-ந்தேதி வரை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

PREV
click me!

Recommended Stories

Cheap Beach Destinations : கோவா இல்லை.. குறைந்த செலவில் அழகான 5 பீச்சுகள்.. லிஸ்ட் இதோ
Kisan Pension : தினமும் ₹1.80 சேமிப்பு போதும்.! 60 வயசுக்கு மேல ₹36,000 பென்ஷன்.! விவசாயிகளுக்கான மத்திய அரசின் சூப்பர் திட்டம்!