
சூதாட்டத்தில் பணம், நகைகளை இழந்து கடைசியாக மனைவியை வைத்து சூதாடி தோற்றதால், கணவன் கண்முன்னே மனைவியை கொடூரமாக கற்பழிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாலியாபால் பகுதியைச் சேர்ந்த நபர் ஐதராபாத்தில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். கடந்த 23-ம் தேதி மனைவியை கிராமத்தில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்ற அந்த கணவன், அங்கு ஏற்கனவே காத்துக்கொண்டிருந்த அபிராம் தலாய் என்பவரிடம் மனைவியை ஒப்படைத்துள்ளார். என்ன நடக்கிறது என புரியாமல் இருந்த அந்த பெண்ணை தலாய் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை, அந்த பெண்ணின் கணவர் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளார்.
மேலும், இந்தவிஷயத்தை வெளியே கூறக்கூடாது என கொலை மிரட்டலும் அப்பெண்ணுக்கு விடப்பட்டுள்ளது. கொலை மிரட்டலையும் தாண்டி அப்பெண் போலீசில் சென்று புகாரளித்துள்ளார்.
போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பெண்ணின் கணவரும், தலாயும் சூதாடியுள்ளனர். தலாயிடம் கையிலிருக்கும் பணத்தை மற்றும் நகைகளையும் இழந்த அந்த கணவன் கடைசியாக தனது மனைவியை வைத்து விளையாடியுள்ளார்.
ஆனால், அதிலிலும் தோற்றுப்போனதால் கொஞ்சம் கூட பாவம் பார்க்காமல் தனது மனைவியை குளத்திற்கு அழைத்து வந்து தலாயிடம் ஒப்படைத்து உல்லாசமாக இருக்கச் செய்துள்ளார். அதற்க்கு மனைவி சம்மதிக்காததால், மனைவியை பலவந்தமாக கற்பழித்துள்ளார். அதை அந்தப்பெண்ணின் கணவன் அருகிலிருந்து வேடிக்கை பார்த்துள்ளான். தற்போது, தலைமறைவாக இருக்கும் இருவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.