
கணவர் சூதாட்டத்தில் தன்னுடைய மனைவியை வைத்து தோற்றதால், அவருடைய மனைவியை தன்னுடைய நண்பருக்கே இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் பலாசோர் என்ற மாவட்டத்தில் உள்ள பாளியாபால் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கடந்த 23 ஆம் தேதி தன்னுடைய மனைவியை கிராமத்தின் அருகே உள்ள குளத்திற்கு அழைத்து சென்று, அங்கு ஏற்க்கனவே காத்துக்கொண்டிருந்த தன்னுடைய நண்பன் அபிராம் தலாய் என்பவரிடம் ஒப்படைத்தார்.
என்ன நடக்கிறது என ஒரு நிமிடம் குழம்பி இருந்த அந்த பெண்ணை... அபிராம், கணவர் கண்முன்பே கதற கதற கற்பழித்தார். இந்த சம்பவத்தை எந்த வித குற்ற உணர்வும் இன்றி கணவன் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசாரிடமோ அல்லது மற்றவர்கள் யாரிடமாவது கூறினால், கொலை செய்துவிடுவேன் என இருவரும் இணைந்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர்.
கொலை மிரட்டலை தாண்டி அந்த பெண் மிகவும் துணிச்சலாக, போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த பெண்ணின் கணவரும், அபிராமும் சூதாடியுள்ளனர். அமிராமிடம் தான் கையில் வைத்திருந்த பணம், மற்றும் நகை அனைத்தையும் தோற்ற இவர் இறுதியில் தான் தாலி கட்டிய மனைவியை வைத்து சூதாடியுள்ளார்.
அதிலும் தோற்றுப்போக சிறிதும் இரக்கமின்றி தனது மனைவியை அபிராமுக்கு இரையாக்கியுள்ளார். மேலும் தற்போது இவர்கள் இருவரும் போலீசாருக்கு பயந்து தலைமறைவாகி உள்ளனர். எனினும் இருவரையும் போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.