90களில் ஆரம்பம்.. 2023ல் தொடர்கிறது.! ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு உள்ள தொடர்பு என்ன?

By Raghupati RFirst Published Jun 6, 2023, 9:18 PM IST
Highlights

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மிக மோசமான மூன்று ரயில் விபத்தை அடுத்து, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் சிறந்த அமைச்சர்களில் ஒருவராகக் கருதப்படும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தை அடுத்து, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை வைத்து வருகின்றன.

இந்த ஒடிசா ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விபத்து, முற்றிலும் அலட்சியம் மற்றும் திறமையின்மையினால் நடைபெற்றது என்று காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகிறது.

சிஏஜி, நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் நிபுணர்கள் பலமுறை எச்சரித்தும் ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த மத்திய அரசு போதிய செலவு செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இருப்பினும், அரசாங்கம் மற்றும் ரயில்வே அமைச்சகம் எடுத்த பல நடவடிக்கைகளால் இந்திய ரயில்வேயில் விபத்து இறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டுள்ளது என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த பேரழிவுகரமான ரயில் விபத்திற்கு சிக்னல் அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறே காரணமாக இருக்கலாம் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்தார். இவருக்கும் விபத்து நடந்த பாலசோர் என்ற பகுதிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, 90களில் பாலசோர் மாவட்ட கலெக்டராக வைஷ்ணவ் பணியாற்றினார். கட்டாக் கலெக்டராகவும் பணியாற்றினார். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அலுவலகத்தில் துணைச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு 2003 வரை ஒடிசாவில் பணியாற்றினார்.

பிரதமர் அலுவலகத்தில் (PMO) அவரது பணியின் போது, உள்கட்டமைப்பு திட்டங்களில் PPP கட்டமைப்பை உருவாக்குவதில் அவரது மகத்தான பங்களிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார். 2004 பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தோற்கடிக்கப்பட்ட பிறகு அவர் வாஜ்பாயின் தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

மத்திய ரயில்வே அமைச்சர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றவர். ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் உள்ள MBM பொறியியல் கல்லூரியில் (JNVU) எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர். ஐஐடி கான்பூரில் தனது எம்டெக் முடித்தார். பின்னர் அவர் 1994 இல் இந்திய நிர்வாக சேவைகளில் (IAS) அகில இந்திய தரவரிசையில் 27 வது இடத்தைப் பிடித்தார்.

வார்டன் பள்ளியில் MBA முடித்ததும், வைஷ்ணவ் இந்தியா திரும்பினார். அடுத்ததாக GE டிரான்ஸ்போர்ட்டேஷன் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக தலைமைப் பொறுப்பை ஏற்றார். சிறிது காலத்திற்குப் பிறகு, அவர் சீமென்ஸில் என்ஜின்களுக்கான துணைத் தலைவராகவும் நகர்ப்புற உள்கட்டமைப்பு துறையின் தலைவராகவும் சேர்ந்தார்.

இருப்பினும், குஜராத்தில் இரண்டு வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக 2012 இல் கார்ப்பரேட் துறையிலிருந்து விலகினார். ராஜ்யசபாவில் ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தி 2019 முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். பிஜு ஜனதா தளத்தின் ஆதரவின் காரணமாக அவர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ரயில்வே அமைச்சகத்தைத் தவிர, ஐடி மற்றும் தகவல் தொடர்புத் துறைகளையும் வைஷ்ணவ் வைத்திருக்கிறார்.

இதையும் படிங்க..ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்

click me!