போன் வாங்க பொண்டாட்டியை வித்த புருஷன்… என்ன கொடுமை சார் இது…?

Published : Oct 23, 2021, 07:55 PM IST
போன் வாங்க பொண்டாட்டியை வித்த புருஷன்… என்ன கொடுமை சார் இது…?

சுருக்கம்

ஒடிசாவில் ஒரு போன் வாங்க தன் பொண்டாட்டியை கணவரே விற்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஒடிசாவில் ஒரு போன் வாங்க தன் பொண்டாட்டியை கணவரே விற்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இப்போதுள்ள உலகம் நவீன உலகம். அனைத்து வசதிகளும் கையடக்க போனில் வந்துவிட்டது. வெகு சாதாரண நபர்களிடம் கூட விலை உயர்ந்த போன்கள் பயன்படுத்தும் நிலைமை வந்துவிட்டது. ஒருவர் ஒரு போனுக்கு பதிலாக 2 அல்லது 3 செல் போன்கள் பயன்படுத்தி வருவதை எளிதாக காணலாம்.

ஆனால் ஒடிசாவில் ஒரு ஸ்மார்ட் போன் வாங்க ஆசைப்பட்டு தமது பொண்டாட்டியை விற்றிருக்கிறார் ஒரு கணவன். ஒடிசாவில் கடந்த ஜூலை மாதம் இருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் செங்கல் சூளை ஒன்றில் வேலை பார்க்க ராஜஸ்தான் சென்றிருக்கின்றனர். பாரன் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில் இருவரும் வேலை செய்து வந்திருக்கின்றனர். அங்கு செங்கல் சூளை முதலாளியிடம் தமது மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்றிருக்கிறான் கணவன்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த பெண்ணை மீட்க அங்கு சென்றிருக்கின்றனர். ஆனால் உள்ளூர் மக்களோ பணம் வாங்கிய பெண்ணை அனுப்பி வைக்க மாட்டோம் என்று கூறி போலீசை ஊருக்குள் விட மறுத்திருக்கிறார்கள்.

கடைசியில் ஒரு வழியாக அந்த பெண்ணை மீட்ட போலீசார் கணவனை கைது செய்துள்ளனர். இத்தனைக்கும் அந்த கணவனுக்கு வயது 17 தான். இதையடுத்து அவனை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி இருக்கின்றனர் போலீசார்.

PREV
click me!

Recommended Stories

தவித்த கர்ப்பிணி பெண்.! கதறிய சிறுமி.! கொதித்தெழுந்த உறவினர்கள்...! டெல்லி ஏர்போர்ட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!